Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா பிறந்தநாளில் மிகப்பெரிய சம்பவம்! 1000 முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்பட உள்ளன. ஜெயலலிதா பிறந்தநாளான நாளை, முக்கியமான திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்தகங்களில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில், ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் இந்த முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Mudhalvar marunthagam chennai tn government

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதில் 50 சதவீதம் பணமாகவும் 50 சதவீதம் மருந்துப் பொருட்களாகவும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முழுவதும் பலரும் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் 33 இடங்களிலும் மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என்ற எண்ணிக்கையில் முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்படவுள்ளன.

1000 முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மருந்தகங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேலும் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மருத்துவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான எழிலன், "முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறக்க உள்ளார். நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் அதை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

அதன் பின்னர் முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முதல்வர் மருந்தகம் திறப்பதற்க்கு 3 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும். மருந்துகளை ஆய்வு செய்து தரமான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படும்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்க இருப்பதன் வழி, 75% அளவுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். உதாரணத்திற்கு தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும்.

மாநில பட்டியலில் கல்வியும் சுகாதாரமும் இருந்தால் தான் மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகளை எழுதாமல், பிராண்டட் மருந்துகளை எழுதும் முறையை பின்பற்றி வருகிறோம். ஆகவே தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய தற்போது ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கப்படுகிறது.

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எந்த ஆட்சியில் கொண்டுவந்தாலும் அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒரு திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் முதல்வர் மருந்தகம் திறப்பதில் தவறு ஏதும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+