Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரடியாக இறங்கும் ஸ்டாலின்! போராடும் ஆசிரியர்களுக்கு வருது விடிவுகாலம்! எடுக்கப்படும் பிரம்மாஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போராட்டம் முடக்கப்பட்டது. இவர்கள் மீண்டும் போராட்டம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வந்தனர். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் செய்து வந்தனர். அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் ஆசிரியர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

போராட்டம்: சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். 7 வது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் 3 வகையான ஆசிரியர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் மூன்று விதமான கோரிக்கைகளை வைத்தனர்.

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் செய்தனர். பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் செய்தனர்.

 CM Stalin to make an important announcement on Teachers protest and requests

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு: இன்னொரு பக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்'' என கூறினார். முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் இடையில் நடந்த ஆலோசனைக்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதனை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விடாமல் போராட்டம் தொடர்ந்தது.

எடுபடாத பேச்சுவார்த்தைகள்: இவர்களிடம் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்து வந்தது. முக்கியமாக அமைச்சர் அன்பில் மகேஷ் இவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து வந்தார்., ஆனால் பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசிடம் நிதி இல்லை. போதிய நிதி இல்லை.ஆசிரியர்களுக்கு கொடுக்க இவ்வளவு நிதிதான் இருக்கிறது. அந்த நிதியை வைத்தே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த நிதிக்குள் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செலவு செய்கிறோம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அந்த நிதிக்கு ஏற்றபடி எவ்வளவு ஒதுக்கீடு செய்ய முடியுமோ அதை ஒதுக்கீடு செய்வோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

( இனிமேலும் பொறுக்க முடியாது.. ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.. தமிழக அரசு ஆக்சன்! )

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன.

கைது: இந்த நிலையில் சென்னையில் ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இந்த கைதோடு அவர்களின் போராட்டமும் முடக்கப்பட்டது.

இவர்கள் மீண்டும் போராட்டம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதன்பின் இவர்களின் கோரிக்கையில் முக்கியமான ஒரு கோரிக்கை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி நேரடியாக முதல்வர் ஸ்டாலின் இவர்களின் குழுவை சந்தித்து பேசலாம் என்றும் கூறப்படுகிறது. அதோடு மிக முக்கியமாக இவர்களை மாவட்ட அளவில் ஆலோசனைக்கு அழைத்து.. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்ற திட்டத்திலும் அரசு உள்ளதாம்.

முக்கியமாக மாவட்ட அளவில் பேசினால் அவர்களின் சிறிய குறைகள் கூட தெரிய வரும் என்பதால் அதில் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+