கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம்.. ரூ.1615 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்! இன்று ஸ்டாலின் அடிக்கல்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ரூ.1615.29 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 6 தென் மாவட்டங்கள் மற்றும் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நீர்வளத்துறை சார்பில் 726.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 503 நிரந்தர சீரமைப்பு, வெள்ளத் தணிப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 115 கோடி ரூபாய் செலவில் 5814.295 கி.மீ. நீளத்திற்கு 1004 சிறப்பு தூர்வாரும் பணிகள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 558 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்னை தீவுதிடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் புதியநடை மேம்பாலம், புதிய பள்ளி வளாகம் கட்டுதல், மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்துதல், விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல், மிதி வண்டி மற்றும் நடைபாதை அமைத்தல், கடற்கரை மற்றும் குளங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள், உயர்கல்வித் துறை சார்பில் 86.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டடங்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் 5 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்பட உள்ள 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 6 வட்ட செயல்முறைக் கிடங்குகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்,
இப்படி மொத்தம் 1615 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications