தருமபுரி மாவட்டத்தை பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கோரிக்கை
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தந்துள்ள நிலையில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியின் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்ததால், பழிவாங்கும் நோக்கில் தருமபுரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். "எனக்கு வாக்களித்தவர்கள் வருந்தாத அளவிற்கும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் அளவிற்கும் எனது பணி இருக்கும்" என்ற முதலமைச்சரின் பேச்சு வெறும் வசனமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், "தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான பல திட்டங்களை திமுக அரசு வேண்டுமென்றே முடக்கி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்திட்டங்கள்: விவசாயத்தை மேம்படுத்த உதவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாமக நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பிறகும் அரசு ஆர்வம் காட்டவில்லை. தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக 1733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தும், தொழிற்சாலைகளைத் தொடங்குவதில் திமுக அரசு தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
1941 முதல் நிலுவையில் உள்ள இந்த ரயில் பாதை திட்டத்திற்காக, தேவையான நிலத்தைக் கையகப்படுத்த அரசு அலட்சியம் காட்டுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எண்ணேகோல் புதூர், தும்பலஅள்ளி, பஞ்சப்பள்ளி, புலிக்கரை மற்றும் ஆனைமடுவு அணை போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களையும் அரசு செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாடு குடிமக்கள் தான். அவர்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான் அரசு செயல்படுகிறது. அதனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் மொரப்பூர் ரயில் பாதை திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய விழாவில் வெளியிட வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? முதல்வர் விஜய் முடிவுக்கு அன்புமணி வரவேற்பு -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!











Click it and Unblock the Notifications