2 நாட்கள் அவுட் ஆஃப் ஸ்டேஷன்! முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே செல்கிறார் தெரியுமா?
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
தஞ்சாவூரில் கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை நாளை மாலை திறந்து வைக்கும் அவர், நாளை மறுதினம் திருச்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார்.
இதனால் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

பயணப்பிரியர்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை சென்னையில் இருந்துகொண்டே எல்லா பணிகளும் நடைபெற வேண்டும் என நினைக்காதவர். மக்களிடம் செல் என்ற அண்ணா கட்டளையிட்டதற்கு ஏற்ப, ஊர் ஊராக பயணம் செய்து மக்களையும், கட்சிக்காரர்களையும் நேரில் சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். இதனால் தான் பயணம் செய்வதற்கு மட்டும் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர் சலிக்கமாட்டார்.

2 மாவட்டங்கள்
அந்த வாகையில் நாளை தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் (திமுக மாவட்ட அலுவலகம்) நிறுவப்பட்டுள்ள கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து அன்றிரவு தஞ்சையில் தங்கும் அவர், 30-ம் தேதி திருச்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்தும் அம்மாவட்ட நிர்வாகிகளுடன் சிறிது நேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பதால் அது தொடர்பாக சரிபார்த்தல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தடபுடல் வரவேற்பு
தமிழக அமைச்சர்களில் பவர்ஃபுல் அமைச்சர்களாக வலம் வரும் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முதலமைச்சரை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றனர். இதனிடையே அண்மையில் கனமழையால் பெயர்ந்து போன சாலைகளை முதல்வர் வருகையை ஒட்டி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செப்பனிடும் பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்.. காரணத்தை விளக்கி கடிதம்.. அதிர்ச்சியில் வாசன்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications