கருணாநிதி கைதின் போது நடந்தது என்ன? ஆதவ் அர்ஜுனா கூறும் பொய்கள்.. விளக்கும் கோவி லெனின்.. வீடியோ!
சென்னை: 2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு கருணாநிதி கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் போலீசார் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கருணாநிதி கைது விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது.
தவெகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், கரூர் சம்பவத்திற்கு பின் பொதுச்செயலாளர் ஓடிவிட்டார், நிர்மல் குமார் ஓடிவிட்டார் என்கிறார்கள். யார் ஓடினார்கள்? கலைஞர் கைதின்போது நீங்கள் (ஸ்டாலின்) ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கருணாநிதி கைதின் போது நடந்தது என்ன என்பது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் யூட்யூப்க்கு நக்கீரன் முன்னாள் பத்திரிகையாளர் கோவி லெனின் பேட்டி அளித்துள்ளார். அதில் கோவி லெனின் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும் அவர் எல்லா தரப்பு மீது ஒரு தாக்குதலை நடத்தி கொண்டிருந்தார். நக்கீரன் மீது தாக்குதல் நடந்தது.
கலைஞரின் கைது நள்ளிரவில் நடத்தப்படுகிறது என்றால், அடுத்த நாள் காலையில் பத்திரிகையாளர்கள் ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள். அதாவது ஒரு மோசமான அரிசியை சேமித்து திமுக ஊழல் செய்திருக்கிறது என்று ஜெயலலிதா குற்றம்சாட்டினார். அப்போது பொன்முடி விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்து காட்டினார்.
அந்த அரிசி நல்ல அரிசியாக இருந்தது. ஜெயலலிதா தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்று பொன்முடி குற்றம்சாட்டினார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது, அந்த கேமரா மேன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி பேரணியாக சென்றோம். அப்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வேப்பேரி காவல் நிலையத்தில் வைக்கட்டிருந்தோம்.
சென்னையின் முக்கியமான பத்திரிகையாளர்கள் அனைவரும் அங்குதான் இருந்தோம். இந்த நேரத்தில் ஜெயலலிதா தரப்பில் வேறொரு திட்டத்தில் இருந்தது. மேம்பால ஊழல் வழக்கில் அவசர அவசரமாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அப்போது ஸ்டாலின் 2வது முறையாக மேயராக இருந்தார். அந்த எஃப்ஐஆரில் ஸ்டாலின் பெயரும் இடம்பெற்றது.
இது பத்திரிகைகளில் கூட பெரிதாக வெளி வரவில்லை. அதன்பின் பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இரவில் ஓய்வு எடுத்த போது, 1.30 மணிக்கு எனக்கு தகவல் வந்தது. அந்த நேரத்தில் கலைஞரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். கலைஞர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனார்கள்.
கலைஞரை துன்புறுத்தி கூட்டி வந்தார்கள் என்பது நேரடியாக பார்த்த பின் தெரிந்தது. பின்னர்தான் மத்திய அமைச்சர் டிஆர் பாலு அங்கு வந்து கேட்டை திறங்கள் என்று சண்டை போட்டார். நாங்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்துதான் கலைஞரை பின் தொடர்ந்து செல்கிறோம். நாங்கள் வைக்கப்பட்டிருந்த வேப்பேரி காவல் நிலையத்திற்கு கலைஞர் கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின் மாறன் கேள்வி எழுப்பிய போது, அவரையும் காலினை பிடித்து தூக்கிவிட்டார்கள். அதனால் காலினை பிடிக்காதீங்க என்று சொல்லும் போது, 2 பேரை அடித்துவிட்டார். அதன்பின் மாறனுக்கு நெஞ்சிலேயே அடி விழுந்தது. இன்னொரு பக்கம் கலைஞரின் கார் எங்கோ செல்கிறது. தொடர்ந்து மாவட்ட நீதிபதி அசோக் குமார் வீட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
Pls Embed: https://www.youtube.com/watch?v=W6IJXEflc_4
கனிமொழி, செல்வி, அன்பழகன் என்று ஒவ்வொரு நபராக வரத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் தான், கலைஞர் நக்கீரின் இணை ஆசிரியர் கொடுத்த தாளில், அநீதி வீழும்.. அறம் வெல்லும் என்று எழுதி கொடுத்தார். இன்னொரு பக்கம் ஸ்டாலின் பெங்களூரில் இருந்தார். கலைஞரை கைது செய்துவிட்டார்கள் என்று தெரிந்த பின், சாலை வழியாக காலை 11 மணிக்கு நீதிபதி அசோக் குமார் வீட்டிற்கு வந்துவிட்டார்.
பின் ஸ்டாலினை ரிமாண்ட் செய்தார்கள். வீட்டில் இருந்து வெளியில் வந்த பின், இது பொய் வழக்கு என்றெல்லாம் கூறிவிட்டு, நாங்கள் பார்க்காத ஜெயிலா என்று தெரிவித்தார். இதுதான் அன்று நடந்தது என்று கோவி லெனின் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள ஒன் இந்தியா யூட்யூப் சேனலை பாருங்கள்.












Click it and Unblock the Notifications