பக்கத்தில் பி சுசீலா.. மேடையில் பாடல் பாடி அசத்திய ஸ்டாலின்! என்ன பாட்டு? சுவாரசிய பட்டமளிப்பு விழா
சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கினார். அதன்பிறகு தான் பி சுசீலாவின் ரசிகன் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே ‛‛நீ இல்லாத உலகத்திலேயே..'' எனும் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார்.
தமிழ்நாடு டக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் இசையியல் அறிஞர் பிஎம் சுந்தரம் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசினார். அப்போது அவர் தான் பி. சுசீலாவின் ரசிகன் எனக்கூறி அவரது குரலில் வந்த தனக்கு பிடித்த பாடலை மேடையிலேயே பாடி அசத்தினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசியதாவது:
இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்கு தான் உண்டு. முழுக்க முழுக்க மாநில நிதியில் செயல்படும் பல்கலைக்கழகமாக இது உள்ளது. இதனால் தான் மாநில முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தத்தை தான் பேசுகிறேன்.
முதல் அமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும். சிறப்பாக இயங்கும். மற்றவர்கள் கையில் இருந்தால் பல்கலைக்கழகத்தின் நோக்கம் சிதைந்து போய்விடும் என நினைத்து தான் 2013ம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதல் அமைச்சர் தான் என்று அன்று முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக நாம் அவரை மனதாரா பாராட்டலாம். நானும் மனம் உவந்து பாராட்டுகிறேன்.
இசை பல்கலைக்கழகம் சார்பில் ‛பத்மபூஷண்' பி.சுசீலா, பிஎம் சுந்தரம் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 2 இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளோம். இதன்மூலம் டாக்டர் பட்டமும் பெருமையடைகிறது. பாடகி சுசீலா அவர்களின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவர். வெளியூர்களுக்கு இரவு நேரத்தில் பயணிக்கும்போது அவரது பாடல்களை காரில் கேட்டு கொண்டே செல்வேன்.
சுசீலாவின் பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு என்றால் இதுதான். இந்த பாடலை அடிக்கடி பல இடங்களில் பாடியுள்ளேன். ‛‛நீ இல்லாத உலகத்திலேயே நிம்மதி இல்லை.. உன் நினைவு இல்லாத இதயத்திலே சிந்தனை இல்லை.. காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்க வில்லை.. உன்னை கண்டுக்கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை. இந்த பாடல் தான் அது. இதனால் தான் மேடைக்கு வந்தவுடன் அம்மையாரை(சுசீலா) பார்த்துவிட்டு நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்'' என பேசினார்.












Click it and Unblock the Notifications