மனைவி துர்காவுக்கு 63-வது பிறந்தநாள்! சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! திருமண விழாவில் ருசிகரம்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுக்கு திருமண விழா மேடை ஒன்றில் வைத்து, எல்லோர் முன்னிலையிலும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இரவு 12 மணிக்கே தாம் பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டாலும், எல்லோரும் மேடையில் வாழ்த்துச்சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு அவர் கேட்டுவிடக்கூடாது என்பதால் மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் இந்த பேச்சு திருமண விழாவில் பங்கேற்றவர்களை கலகலப்பாக்கியது.

சகளை மகன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி ஜெயந்தி சரவணன் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. தனது சகளை மகன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுக்கு எல்லோர் முன்னிலையிலும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதனிடையே அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதன் விவரம் பின்வருமாறு;

பிறந்தநாள் வாழ்த்து
முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கழக குடும்பம்
எல்லோரும் பேசுகிறபோது, தளபதி வீட்டுத் திருமணம், நம்முடைய வீட்டுத் திருமணம் என்று அவர்களுக்குரிய வகையில் தம்முடைய வாழ்த்துரையை சொல்லுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இது கழகக் குடும்பத்தின் திருமணம். அதே நேரத்தில் ஒரு பாரம்பரியத்தை பெற்றிருக்கும் ஒரு குடும்பத்தில் நடைபெறும் திருமணம்.

தோடி ராகம்
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்படுகிற திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகளை வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பவர்களில் மிக மிக முக்கியமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தந்தை - என்னுடைய தாத்தா முத்துவேலர் அவர்கள். தோடி ராகத்தை வாசிப்பதில் நாதஸ்வர கலைஞர்களுள் புகழ்பெற்ற ஒரு தன்னிகரில்லா விற்பனராக ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

ராஜரத்தினம் பிள்ளை
இன்னொரு செய்தியும் நான் சொல்லியாகவேண்டும். 1905-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு. அந்த மாநாட்டிற்கு ஜவகர்கலால் நேரு அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்த மாநாட்டையொட்டி ஊர்வலம் ஒன்று நடைபெறுகிறது. முதல் நாள் தலைவர்களை எல்லாம் வரவேற்று அந்த ஊர்வலம் நடக்கிறது, பேரணி நடக்கிறது. அந்த ஊர்வலம் நடைபெறுவதற்கு முன் வரிசையில் நின்று அங்கு நாதஸ்வரம் வாசித்தவர்தான் நம்முடைய பெருமைக்குரிய ராஜரத்தினம் பிள்ளை அவர்கள். தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களை சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்.

கிராப் வெட்டி
இன்னொன்று, அவருடைய ஸ்பெஷலட்டி என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாதஸ்வர கலைஞர்களில் முதல்முறையாக 'கிராப்' வைத்துக் கொண்டவரும் அவர்தான். அது மட்டுமல்ல, முதல் முறையாக 'கோட்' போட்டுக் கொண்டு, 'ஷெர்வாணி' ஆடைகளை அணிந்து விட்டு வந்தவரும் நம்முடைய ராஜரத்தினம் பிள்ளைதான் அவர்கள். இத்தகைய ஆடைகளை அணிந்து கொண்டு மட்டுமல்ல, காலில் 'ஷூ'-வும் போட்டுக் கொண்டிருப்பார்.

பெயர் காரணம்
இன்று டி.என்.ஆர் அவர்களுடைய கொள்ளுப் பெயரன் கருணா ரத்தினத்திற்கும் - செல்வி காவ்யா அவர்களுக்கும் என்னுடைய தலைமையில் இந்த திருமணவிழா நடந்தது என்றால் கழகத்தின்பால் இந்தக் குடும்பத்திற்கு ஒரு நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.இங்கே நன்றியுரை ஆற்றிய டாக்டர் ராஜமூர்த்தி அவர்கள் பேசியபோது குறிப்பிட்டுச் சொன்னார். இவருக்கு எவ்வாறு இந்தப் பெயர் கிடைத்தது என்று.

கருணாரத்தினம்
கருணாரத்தினம், இந்த கருணா பிறந்தவுடன் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும், என்னுடைய மனைவி துர்கா அவர்களும் குழந்தையாக இருந்த கருணாவை கொண்டு சென்று தலைவர் கையில் கொடுத்துப் பெயர் வைக்கவேண்டும் என்று கேட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் 'கருணாரத்தினம்' என்று பெயர் வைத்தார்கள். இதைக்கேட்டதும் சிலருக்கு இவ்வாறு ஒரு பெயர் வைத்து விட்டாரே, இதற்கு என்ன பொருள் என்று யாருக்கும் புரியவில்லை.

பாசமானவர்
தலைவருடைய பெயர் கருணாநிதி, அந்தக் கருணா என்ற பாதி எழுத்தை எடுத்து, ராஜரத்தினம் பிள்ளையின் ரத்தினத்தைச் சேர்த்து 'கருணா ரத்தினம்' என்று பெயர் சூட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அப்படிப்பட்ட பெருமைக்குரிய பெயரைத் தாங்கியிருக்கும் மணமகன் கருணாரத்தினம், என்னுடைய குடும்பத்தைப் பொறுத்தவரையில் எந்த அளவிற்கு அவர் பாசமாக இருந்திருக்கிறார்; இருந்து கொண்டிருக்கிறார்; இருக்கவும் போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் கேரண்டி
அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்காக அபுதாபிக்கு சென்றார். அபுதாபி சென்று, ஒரு வருடம் - இரண்டு வருடம் வேலை பார்த்திருப்பார். அதற்குப் பிறகு, என்னால் அங்கு இருக்க முடியாது, எனக்கு ஹோம் சிக் வந்துவிட்டது, நான் அம்மாவை பார்க்க வேண்டும், அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைவிட நான் என்னுடைய அண்ணன் உதயநிதியைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி வந்தவர்தான் நம்முடைய கருணா அவர்கள். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்குக் குடும்பத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவர். எனவே மணமகள் காவ்யா கவலைப்பட வேண்டாம். அவர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்து நிச்சயமாக வாழ்க்கையை நடத்துவார். அதற்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications