100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்கவும் -பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
சென்னை: ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த மாநில அரசிடம் மேற்கொண்டு நிதி ஆதாரமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று தான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக சுட்டிக்காட்டிய ஒரே நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் தவித்து வருவதாகவும் இதனால் நவ.1 வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையான ரூ.1,178 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதால் கிராமப்புறங்களில் இருந்து பல குடும்பங்கள் நகர்ப்புறம் நோக்கி வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டாவது தமிழகத்திற்கான 100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் 92.31 லட்சம் குடும்பங்கள் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை 63.35 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நிதிநிலை மோசமாக உள்ள சூழலில், 100 நாள் வேலைத்திட்டத்தின் நாட்கள் எண்ணிக்கையை 150 ஆகவும், நாள் ஊதியத்தை 273 ரூபாயிலிருந்து ரூ.300 ஆகவும் உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ்நாடு அரசு ரூ.1,999 கோடியை கூடுதலாக செலவழித்துள்ளதாக கூறியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் மாநில அரசு தனது வருவாய் நிதியை கொண்டு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications