திமுகவில்.. கட்டம் கட்டப்படும் "24 பேர்".. பறிக்கப்படும் பதவிகள்.. என்ன காரணம்? யார் அவர்கள்?
திமுகவில் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் கசிந்து வருகிறது.. திமுகவில் மொத்தம் 24 பேரின் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. என்ன காரணம்? யார் அவர்கள்?
ஒருவருக்கு ஒரு பதவி என்ற பார்முலா தற்போது அமலில் உள்ளது.. ஒருத்தர் இன்னொரு பதவியில் இருந்தால் அவரது பதவி பறிக்கப்படுகிறது.. அப்படித்தான் ரோஜாவின் பதவியையும் ஜெகன் மோகன் பறித்துள்ளார்.
இதே விவகாரம் தமிழகத்திலும் யூடர்ன் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, கட்சிப்பணி, ஆட்சி பணி என்று இரண்டிலும் உள்ளவர்களில், ஒருபதவியை பறிக்க திமுக தரப்பில் முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

77 மாசெக்கள்
திமுகவில் இப்போதைக்கு 77 மாவட்ட செயலர்கள் இருக்கிறார்கள்.. வழக்கமாக மாவட்ட செயலாளர்கள்தான் அமைச்சர்களாகவும் இருப்பார்கள்.. இது அதிமுக, திமுக என இரண்டிற்குமே பொருந்தும் அரசியல் உண்மை... இப்போதும் பெரும்பாலான மாவட்ட செயலர்கள், அமைச்சர்களாகவே பதவியில் உள்ளனர்.. இவர்கள் கட்சியையும் கவனித்து கொள்ள வேண்டும், ஆட்சி பொறுப்பையும் கவனித்து கொள்ள வேண்டும்.

புகார்
இதனால், இவர்களால் கட்சி பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை என்ற லேசான குற்றச்சாட்டு மாவட்ட அளவில் எழுந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, சில அமைச்சர்கள், தங்கள் உறவினர்களுக்கு அதிகாரத்தை தந்துள்ளதாகவும், பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிப்பதாகவும் நிறைய புகார்கள் அறிவாலயத்தை எட்டி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மீது தலைமைக்கு அதிருப்தியும் கூடி வருகிறதாம்.

பதவி
இப்படி புகார் வரும் மா.செ.க்கள், நிர்வாகிகள், செயல்படாத சீனியர்கள் போன்றோரை நீக்கவும் கட்சி யோசித்து வருகிறது.. அதுமட்டுமல்ல, அப்படி இவர்களை நீக்கிவிட்டு, அவர்கள் வகித்த பதவிக்கு, புதிய மற்றும் கட்சிக்காக தீவிரமாக உழைக்கக்கூடிய நிர்வாகிகளை நியமிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

அமைச்சர்கள்
இப்போது விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற பார்முலா அடிப்படையில், 24 அமைச்சர்களிடம் இருந்து, மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது... அதற்கு பதிலாக துடிப்புள்ள புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க லிஸ்ட் ரெடியாகி கொண்டிருக்கிறதாம்.. குறிப்பாக, மாற்று கட்சியில் இருந்து திமுகவை நம்பி வந்தவர்களுக்கு இப்படி ஒரு பதவியை தர ஸ்டாலின் யோசித்து வருகிறாராம்..!
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications