Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமை தொகை.. அபராதம் பிடிக்காமல் இருக்க 2 ஆப்சன்.. முதல்வருக்கு வங்கி ஊழியர் சங்கம் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

CM to convert kalaingar magalir urimai thogai womens bank accounts to zero balance accounts: banks

கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் சுமார் ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்திய பின்னர், மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பலரது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வங்கிகள் பிடித்துக்கொண்டன. இதனால் ஆயிரம் ரூபாய் பணத்தை முழுதாக எடுக்க சென்றவர்களுக்கு அந்த தொகை கிடைக்கவில்லை. 900 ரூபாய் என்கிற அளவில் தான் கிடைத்துள்ளது. சிலருக்கு அந்த பணமும் கிடைக்கவில்லை.

மினிமம் பேலன்ஸ் இல்லை என ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பிடிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. அதனை மீறி அபராதம் வசூலிக்கப்பட்டதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.

பொதுத்துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். அதேநேரம் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஜன்தன் கணக்கு மட்டும் பூஜியம் சேமிப்பு வங்கி கணக்கு ஆகும். அந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருந்தாலும் பிரச்சனை இல்லை என்ற நிலை உள்ளது.

இதனிடையே வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்திய போதும், அபராதம் விதிக்கப்பட்டதுசலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வங்கி தரப்பினர் கூறும் போது, பொதுவாக ரூ.1000-ம் குறைந்தபட்சம் பேலன்ஸ் வங்கி கணக்கில் வைத்திருக்க வேண்டும் . அப்படி இல்லை என்றால் வங்கி கணக்கிற்கு பணம் தானாகவே அபராத தொகை வசூலிக்கப்படும் என்றும் இதுதான் நடந்தது என்றும் கூறினார்கள்.

இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை எடுக்கும்போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

தற்போது அனைத்து வங்கிகளிலும் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒன்று 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லப்படும் கணக்கு ஆகும்.இந்த கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியும் உள்ளது. இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

இரண்டாவது வகை சாதாரண சேமிப்பு கணக்கு ஆகும். இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்பை விட பணம் குறையும்போது அபராதம் தானாகவே வசூலிக்கப்படும்.

தற்போது உள்ள வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்ற முடியும். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய முடியாது.

தற்போது மகளிர் உரிமை திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுவது நடக்கிறது.

எனவே இதற்கு தீர்வாக, வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற தமிழக அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம்" என இவ்வாறு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் தனது கடிதத்தில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+