தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை மூடப்படுகிறதா? அதிரடிக்கு தயாராகும் விஜய்! லிஸ்ட் எடுக்கும் அதிகாரிகள்
சென்னை: தமிழகத்தில் கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும், இது போன்ற விதிமீறல் உள்ள இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை கணக்கு எடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தேர்தல் பிரசாரத்தின் போதே தவெக ஆட்சியில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என கூறியிருந்தார்.

நேற்று தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதும், பெண்கள் பாதுகாப்பை மிகவும் கடுமையாக வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுக்குள் வைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை இன்றிலிருந்தே எடுப்பேன் என்றும், சட்டம் ஒழுங்கில் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்றும் பேசியிருந்தார்.
மேலும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு யுக்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காக கொண்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்குவதற்கு ஆணையிட்டார். இதேபோன்று, தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடிதது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்க ஆணையிட்டார்.
தொடர்ந்து நேற்று மாலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் விஜய் பெண்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 200 முதல் 300 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள
டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்பதாகவும் இதன் அடிப்படையில் விதிகளை மீறி அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிகளை மீறி உள்ள கடைகளை அகற்ற விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக 200 முதல் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications