வாத்தி ரெய்டு.. கடுப்பான முதல்வர் விஜய்..! ஓரே அடியாக அடித்த புஸ்ஸி ஆனந்த்.. TVK தொண்டர்கள் ஷாக்!
தென்காசி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தவெக கட்சியினர் செய்த ஆய்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை கோட்டை வரை சென்றது மட்டும் அல்லாமல் முதல்வர் விஜய் இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தாக கூறப்படுகிறது. இதனிடையில் 2 முக்கிய அமைச்சர்கள் முக்கிய விளக்கத்தையும், உத்தரவையும் விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழக அரசியல் மற்றும் மருத்துவத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் மருத்துவ அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டது மட்டுமின்றி, அணைக்கட்டு பகுதியிலும் சில ஆய்வுகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகள் அரசு மருத்துவ சேவையில் தவெக கட்சி தேவையில்லாமல் தலையீடு செய்கிறது என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளன.

இந்த ஆய்வு நடைபெற்றதற்கு முக்கிய காரணம், அந்த மருத்துவமனையில் சாலை விபத்துக்கு ஆளான ஒரு நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை சரியாக வழங்கப்படவில்லை என்ற செய்திகள் பரவியதுதான். இதனால், மருத்துவமனை நிர்வாகிகளின் அனுமதியுடன் தவெக அணியினர் "review meeting" ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கை அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அரசு சேவை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கம் (SDPGA) மற்றும் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (TNMOA) ஆகிய இரு முக்கிய மருத்துவர் அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளன. மருத்துவமனை போன்ற அரசு நிறுவனங்களில் கட்சி சார்பில் ஆய்வு செய்வது சரியானதல்ல என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவு
இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, தவெக தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். விஜயின் உத்தரவின்பேரில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ஊரக நிர்வாகத் துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், கட்சி உறுப்பினர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு சார்ந்த எந்த விவகாரத்திலும் கட்சியினர் தலையிடக்கூடாது, ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது, தங்கள் வரம்பைத் தாண்டி செயல்படக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தவெக கட்சியினர் தங்களது எல்லை என்ன என்பதை உணர்ந்து அறிந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது அறிவிப்பில் அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவது தவறு, இனி எவ்விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளனர்.
தவெகவினர் மக்கள் சேவையில் தொர்ந்து பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும். ஆனால், கட்சியினர் தங்களது எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் புஸ்ஸி ஆனந்த். இது அரசு இயந்திரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மக்கள் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.
கே.ஜி.அருண்ராஜ் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ், "முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் கட்சியினருக்கு தெளிவான உத்தரவு கொடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மூலம், அரசு மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல் அரசு சார்ந்த செயல்பாட்டில் கட்சி தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது தவெக நிர்வாகம்.
-
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு!












Click it and Unblock the Notifications