Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் VS ஆளுநர்.. அமைச்சரை நீக்கும் அதிகாரம் யாருக்கு? டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்என் அதிரடியாக இன்று நீக்கம் செய்துள்ளார். இதனால் அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதல்வர் அல்லது ஆளுநர் ஆகியோரில் யாருக்கு உள்ள என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை நீக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது.

அதேபோல் செந்தில் பாலாஜி நிர்வகித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பையும் மீறி முதல்வர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்து செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைத்தார்.

CM VS Governor: Who has authority to removes ministers from the cabinet? Delhi High court says this on the case of Satyendra jain

இதற்கிடையே தான் இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து ஆளுநர் ஆர்என் ரவி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்வது விசாரணையை பாதிக்கும் எனக்கூறி ஆளுநர் ஆர்என் ரவி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்துள்ளார்.

இதனை எதிர்த்து தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்த உள்ளது. மேலும் அமைச்சர் ஒருவரை நீக்கம் செய்ய முதல்வர் அல்லது ஆளுநர் ஆகியோரில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடை வேண்டும் என்றால் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்ட வழக்கை கவனித்தால் நன்கு புரியும்.

அதாவது டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர் பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது நடவடிக்கையை தொடர்ந்து சத்யேந்திர ஜெயினின் இலாகா துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இந்நிலையில் தான் சத்யேந்திர ஜெயின் அமைச்சராக தொடர எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினை நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. ஜூலை இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்ற பின்னணி கொண்ட ஒருவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் அமைச்சரவை நீக்கம் செய்ய ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வேளையில் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தது. அதாவது ஒருவரை அமைச்சராக தொடர வைப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்க முடியாது. இது முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உரிமை. மாநிலத்தின் நலன் கருதி செயல்படுவதும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை அமைச்சராக தொடர வேண்டுமா? இல்லையா? என்பது முதல்வரின் முடிவு தான்.

மாநில முதல்வர் தான் ஒருவரை அமைச்சராக தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கூறுவது நீதிமன்றத்தின் பணியாகும். அதன்படி இந்திய அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதில் அமைச்சரவைக்கு கூட்டு பொறுப்பு உள்ளது. இதில் கவனம் வேண்டும்'' என நீதிமன்றம் கூறியது.

இதன்மூலம் சத்யேந்திர ஜெயின் தொடர்ந்து அமைச்சராக இருக்க நீதிமன்றம் பச்சை கொடி காட்டியது. அதோடு ஒருவரை அமைச்சராக நியமனம் செய்வது, நீக்கம் செய்வது ஆகியவற்றில் முதல்வருக்கு தான் உரிமை உள்ளது என தெரிவித்தது. இதையடுத்து சிறையில் இருந்தாலும் கூட சத்யேந்திர ஜெயின் தொடர்ந்து 9 மாதங்கள் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.

அதன்பிறகு சத்யேந்திர ஜெயின் தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி, பரிந்துரையின்றி ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+