ராகிங்கை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிப்பு.. ஹைகோர்ட்டில் சிஎம்சி நிர்வாகம் உறுதி
சென்னை: ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி எம் சி மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.

தலைமை நீதிபதி
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தரப்பில், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

புதிய விசாரணை
மேலும், புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராகிங் சம்பவம்
ராகிங் சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்து கல்லூரி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு முடித்து வைப்பு
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர். ராகிங் எனப்படுவது ஒருவரை கிண்டல் செய்வது, மோசமாக நடத்துவது, ஒழுங்கீன செயல்களை செய்ய சொல்வது உள்ளிட்டவையாகும். இந்த செயல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ராகிங் சட்டப்படி குற்றச்செயலாகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications