முத்து முத்தான அறிவிப்பு.. அடுத்த மாசமே வருது.. கவனத்தை குவிக்கும் "வண்டலூர்".. தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: சென்னை புறநகரில் 25 கி.மீ நீள சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.
தமிழக போக்குவரத்துதுறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. அதிலும் மாவட்ட வாரியாக, ஆய்வுசெய்து, பொதுமக்களின் நன்மை கருதி புது புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார். அதுபோலவே, இன்னொரு அறிவிப்பு குறித்தும் கடந்த வாரம் முக்கிய தகவல் வெளியிட்டிருந்தார்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு: அதாவது, சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்டுகள்: இதன் இறுதிக்கட்ட பணிகள் முடியப்போகிறது.. இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பஸ்கள்-62) நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன... இந்த நிலையத்தில், புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகர பஸ்கள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளன.
தனி அலுவலக கட்டிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள்.. கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளது. இம்முனையத்தில் 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம்: மேலும், தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள். அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 6 பயணிகள் மின் தூக்கிகள், 2 சர்வீஸ் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளது. மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகள்: மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேர பயன்பாட்டிற்க்காக அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து இம்முனையம் 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது" என்று கூறியிருந்தார் அமைச்சர் சேகர் பாபு.
புதிய பஸ் ஸ்டாண்டு: இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் முடிவுற்றப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்முனையத்திலிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை 7 கிலோமீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை 18 கிலோ மீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் அமையுள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் (Omni Bus Idle Parking) இடம் தேர்வு செய்வதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
கோரிக்கை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை சுற்றி எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது என்றும், அதிலும் பண்டிகைக் காலங்களில் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதால், இதற்குத் தீர்வு காண வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான முயற்சியை அடுத்து வருகிறது.. இனி கோயம்பேட்டில் நெரிசல் குறையும் என்றும் நம்பப்பட்டும் வருகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications