அப்படியே கலர் மாறும் வடசென்னை.. பலநூறு கோடிகளை இறக்கும் தமிழ்நாடு அரசு.. ரெடியான "பிக் ப்ராஜெக்ட்"
சென்னை: வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை: சென்னையில் தென்சென்னை தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் இன்னும் வடசென்னை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இந்த நிலையில்தான் வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான "பிக் ப்ராஜெக்ட்" திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதன்படி வடசென்னை வளர்ச்சியை மையப்படுத்தி, அங்கே உள்ள குறைகளை போக்க, 1,000 கோடி ரூபாய் செலவில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடசென்னையை மொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தென்சென்னை அளவிற்கு அல்லது தென்சென்னையை விட சிறப்பாக சென்னையை வளர்க்கும் முடிவில் இந்த 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இந்த பணிகள் நடக்க உள்ளன. இதன் ஒரு கட்டமாக வுமன் கிர்ஸ்டியன் கல்லூரி மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் வடசென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் அங்கே உள்ள பிரச்சனைகளை சர்வே எடுக்க உள்ளனர். அதேபோல் அதிகாரிகளும் தனியாக சர்வே எடுக்க உள்ளனர். பொதுமக்கள், சுயஉதவி குழுக்கள், மீனவர்கள், ஓட்டுநர்கள், விளையாட்டு வீரர்கள், வர்த்தகர்கள் போன்றோரைஅவர்கள் சந்தித்து அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் பிரச்சனைகளை, குறைபாடுகளை ஆய்வு செய்வார்கள். மணலி, திருவொற்றியூர், மாதவரம், தொண்டியார்பேட்டை, கொளத்தூர் ராயபுரம், திரு வி கா நகர் & அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆய்வின் முடிவில் என்னென்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ரிப்போர்ட்டை இவர்கள் கொடுக்க உள்ளனர்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications