தட்டி தூக்கிய தமிழக அரசு.. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு
சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தில் சுமார் ரூ.13,016 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. இந்த முதலீடுகள் மூலம் 17,813 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 30ம் தேதி ஜெர்மனி சென்ற முதலமைச்சர், அங்கு 'டிஎன் ரைசிங் ஜெர்மனி' என்கிற பெயரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் மூலம் ரூ. 7,020 கோடி மதிப்பில் 26 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றடைந்தார் முதலமைச்சர். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 'பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையில் ஆழமான தாக்கம்' குறித்து முதலமைச்சர் சிறப்புரையாற்றியிருந்தது கவனம் பெற்றிருந்தது. இதனையடுத்து அங்கு முதலீட்டாளர்களை சந்தித்த அவர், ரூ.5,996 மதிப்பில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications