சென்னையில் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தின் குறுக்கே சிக்கிய ‘மர்ம’ பொருள்.. பகீர் சம்பவம்!
சென்னை : உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரயில் தண்டவாளங்களில் டயர்கள், தென்னை மரத் துண்டுகள் வைக்கப்பட்டு வரும் சம்பவங்கள், ரயில்களை கவிழ்க்க சதி வேலையா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வரலாற்றில் பதிவான மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றான ஒடிசா ரயில் விபத்து உலகையே உலுக்கியது. ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த மூன்று ரயில்கள் விபத்தில் சுமார் 280 பேர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் முடிவடைந்ததுமே புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் ரயில்வே அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ரயில் ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு ரயில்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவரூரில் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் தென்னை மரத் துண்டு வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவில் அந்த வழியாக வந்த ரயில் என்ஜின், தென்னை மரத்துண்டில் சிக்கி நின்றுள்ளது.
இதையடுத்து உடனடியாக கீழே இறங்கி பரிசோதித்த ரயில் என்ஜின் ஓட்டுநர், தண்டவாளத்தில் தென்னை மரத் துண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தார். பின்னர், அந்த தென்னை மரத்துண்டை ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த தென்னை மரத்துண்டை என்ஜின் ஓட்டுநர் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநின்றவர் நேரு நகரைச் சேர்ந்த செந்தில் என்பவரின் வீட்டில் தென்னை மரம் வெட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து தென்னை மரத் துண்டை தண்டவாளத்தில் கொண்டு வந்து வைத்த மர்ம நபர்கள் யார் என தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ரயிலைக் கவிழ்க்க நடைபெற்ற சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்மையில் திருச்சி - சென்னை ரயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே மேலவாளாடியில் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தன. நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த வழியாகச் சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர், தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்டிருப்பதைப் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.
ஆனாலும், ரயில் டயர் மீது மோதியது. நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த டயர் தெறித்தது. படுக்கைவசமாக வைக்கப்பட்டிருந்த டயர் என்ஜின் அடிப்பகுதியில் சிக்கியதால் அங்கு இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டு பழுதாகி நின்றது. மேலும் ரயிலின் என்ஜின் உள்பட 4 பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பழுதைச் சீரமைத்ததும் ரயில் கிளம்பியது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவடி அருகே தண்டவாளத்தில் தென்னை மரத் துண்டு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications