உலகம் முழுக்க ஐடி துறையே அதிர்ந்து நின்ற நேரத்தில்.. IT ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன காக்னிசன்ட்
சென்னை: உலகம் முழுக்க ஐடி துறையில் ஊழியர்கள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் காக்னிசன்ட் நிறுவனம் புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பணியிடங்களை மாற்றியமைக்கும் சூழலில், காக்னிசன்ட் நிறுவனம் புதிய பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கல்லூரி படிப்பை முடித்த இளம் பட்டதாரிகளைப் பணியமர்த்த இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் தெரிவித்து உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு பணியாளர் எண்ணிக்கை
ஒரு கல்லூரிப் பட்டதாரிக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்து, அவர்களது திறனுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு மனித ஆற்றலை அதிகரிக்கும் ஒரு கருவி; இது வேலைகளை நீக்கும் ஒரு உத்தி அல்ல. அதனால் புதிய ஊழியர்களை நாங்கள் பணிக்கு எடுக்கிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் கொடுத்து அவர்களுக்கு பணி செய்ய நல்ல சூழலை வழங்குகிறோம், என்று காக்னிசன்ட் நிறுவனம் கூறி உள்ளது.
இன்னொரு பக்கம் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன. ஐடி சந்தை நிலவரங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிறுவனங்களின் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவது போன்றவை மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் கூடுதல் பணியாளர்களைக் குறைக்கத் தூண்டுகின்றன.
நீடிக்கும் பணி நீக்கம்
டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன.
ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.
பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய மற்றும் மூத்த தரநிலை ஊழியர்களாவர். இவர்களில் பலர் 40 மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பணிநீக்கங்களை மேற்கொள்ளும் டாப் நிறுவனங்கள்:
1. TCS (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்): டாடா குழுமத்தின் ஐடி பிரிவான TCS, உலகளாவிய ஊழியர்களில் 1% ஆன 6,000 பேரை ஏற்கனவே பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் 6,000 பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 12,000 பேர் அல்லது அதன் மொத்த பணியாளர்களில் 2% பேர் பாதிக்கப்படுவார்கள். செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சிக்கு மத்தியில், நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
2. நெஸ்லே SA: இந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், தனது மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 6% ஆக இருக்கும் 16,000 பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
3. அமேசான்: உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், மனித வளங்கள் (People eXperience Technology team) மற்றும் நுகர்வோர் வணிகம் போன்ற துறைகளில் சுமார் 15% பணியிடங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
4. கூகுள்: இந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனம், வடிவமைப்பு சார்ந்த துறைகளில் சுமார் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. அசென்ச்சர்: செப்டம்பர் 2025 இல், அசென்ச்சர் நிறுவனம் தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.












Click it and Unblock the Notifications