Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆட்டு" பிரியாணி கோவையில் ரெடியாகுது.. "ரீபிளேஸ் ராஜா".. அண்ணாமலைக்கு 2 இடி.. தீவிரமாகுது திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் தொகுதிகளிலேயே மிக முக்கிய கவனத்தை திருப்பியிருக்கிறது கோவை தொகுதி.. ஸ்டார் தொகுதியான இந்த கோவை, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

கோவை தொகுதியில் திமுக சார்பில் இந்த முறை யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. பெரும்பாலும் அனைவராலும் கணிக்கப்பட்ட பெயர் மகேந்திரன்தான்.

Coimbatore BJP AIADMK Candidates and DMK TRB Raja has criticized Annamalai with Mutton Biriyani

மகேந்திரன்: மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டபோதே, தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கினால் வாக்குகளை பெற்றவர்.. பசையுள்ள வேட்பாளர்.. தொகுதி மக்களிடம் நேரடியாக தொடர்பில் இருப்பதால், ஓரளவு செல்வாக்கையும் பெற்றவர். எனவே, இவரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்றே பலரும் கணித்தனர்.

ஆனால், கோவை தொகுதிக்கு கணபதி ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம், இவர் செந்தில் பாலாஜியின் அபரிமிதமான ஆதரவை பெற்றவர்.. அனைத்திலுமே செந்தில் பாலாஜியை போன்றவர் என்றே சொல்லலாம்.

செந்தில் பாலாஜி: காரணம், இவரும் முன்னாள் அதிமுக பிரமுகர்தான்.. அன்று அதிமுகவில் இருந்ததால்தான், தனக்கிருந்த தொடர்புகளை வைத்து, செந்தில் பாலாஜியால், கொங்கு கோட்டையை மெல்ல திமுக பக்கம் கொண்டுவர முடிந்தது..

அதுபோலவே, கணபதி ராஜ்குமாரும் அதிமுகவை சேர்ந்தவர் என்பதுடன், வேலுமணிக்கு நெருக்கமானவராகவே அறியப்பட்டவர். அதிமுக மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்திருக்கிறார்.. வேலுமணியின் ஒவ்வொரு அரசியல் அசைவையும் நன்கு அறிந்திருக்கிறார்.. இதையெல்லாம் கணக்கு செய்தே திமுக இவருக்கு சீட் தந்ததாக சொல்கிறார்கள்.

கொங்கு: செந்தில் பாலாஜி இந்நேரம் ஜாமீனில் வெளியாகியிருந்தால், கொங்குவின் நிலைமையே வேறுமாதிரியாக இருந்திருக்கும்... திமுகவும் கொங்கு பொறுப்பை, செந்தில் பாலாஜியிடம் தந்துவிட்டு, மற்ற தொகுதிகளில் கவனத்தை திருப்பியிருக்கும். ஆனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததால், கோவை மாவட்டத்துக்கான பொறுப்பினை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சசர் டிஆர்பி ராஜா ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால், மிக மிக தீவிரமாக வேலை பார்த்து கொண்டிருக்கிறார் டிஆர்பி ராஜா.

இந்த தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார்.. ஒருபக்கம் எஸ்பி வேலுமணி, மறுபக்கம் அண்ணாமலை என இரு ஜாம்பவான்களுக்கு நடுவில் திமுகவின் வெற்றிக்கனியை பறிக்க மும்முரமாகி உள்ளார் ராஜா..

வெற்றிடம்: இவர்களையும் சமாளித்து கொண்டு, செந்தில் பாலாஜியின் வெற்றிடத்தையும் நிரப்ப வேண்டும் என்ற இரட்டிப்பு கட்டாயத்துக்கும் ஆளாகி உள்ளார் டிஆர்பி ராஜா.. கடந்த முறையே கொங்குவில் ஜஸ்ட் பாஸ் வெற்றியை திமுக பெற்றிருந்தது. அதனால்தான், இந்த முறை கொங்கு பகுதியில் திமுகவின் செல்வாக்கை அதிகரிப்பதுடன், 2026 தேர்தலுக்கு அச்சாரம் போடும் வகையிலும், களப்பணியை துவங்கியிருக்கிறது.

கோவையிலேயே வெல்ல முடியாவிட்டால், தமிழகத்தில் வேறு எங்குதான் வெல்ல முடியும்? என்ற ரீதியில் அண்ணாமலை தீவிரமாகியிருக்கிறார். அதுமட்டுமல்ல, வெற்றிபெறாவிட்டால், தலைவர் பதவியும் பறிபோய்விடும் என்ற நிலைமையும் அண்ணாமலைக்கு உள்ளது.

கொங்கு கோட்டை: அதேபோல, நடந்து முடிந்த ஈரோடு தேர்தலிலும், கொங்குவின் கோட்டை என்று சொல்லப்படும் அதிமுக மண்ணை கவ்வியிருந்தது. எனவே, இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்தான், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும், எதிர்காலம் அமையும் என்பதில் என்ற நெருக்கடி அதிமுகவுக்கு வந்துள்ளது. மொத்தத்தில் மும்முனை போட்டியை கோவை எதிர்கொள்வதால் மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணாமலைதான் கொங்கு வேட்பாளர் என்றதுமே, டிஆர்பி ராஜா பிஸியாகிவிட்டார்.. நேற்று முதல்நாளே அண்ணாமலையை விமர்சித்து பேசவும் துவங்கிவிட்டார்.

பிரியாணி: இது குறித்து டிஆர்பி ராஜா தனது ட்வீட்டில், தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம், இப்போதுதான் செய்தி பார்த்தேன், கோவையில் மட்டன் பிரியாணி ரெடியாகின்றது. சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாகிறது என்று பதிவிடவும், பாஜகவினர் டென்ஷனாகிவிட்டனர். எனவே திமுகவுக்கான பதிலடியை தர தயாராகி கொண்டிருக்கிறார்களாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+