"கோவையின் காவி".. ஸ்டாலின்தான் அன்றே தெளிவுபடுத்திட்டாரே.. காம்ரேடுகளுக்கு வந்த ஆவேசம்..!

கோவையில் சில காக்கி உடைக்குள் காவி உணர்வா என்று சிபிஎம் கேள்வி எழுப்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் காந்தியின் கொலைகாரர்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வாதாடுவதா? சில காக்கி உடைக்குள் காவி உணர்வா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்: "மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்தா காலனியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார்.

 உறுதிமொழி

உறுதிமொழி

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள். உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்தபோதே, 'காந்தியை கொலை செய்தது கோட்சே' என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும், காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்துள்ளனர். 'காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நீதிமன்றமே அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது.

 எதற்காக காவி சிந்தனை

எதற்காக காவி சிந்தனை

காவல்துறை அந்த வாசகத்தை எதிர்த்து இடையூறு செய்வது சரியல்ல' என்று ஜி.ராமகிருஷ்ணன் பலமுறை தெரிவித்தும் வாக்குவாதத்தை அதிகாரிகள் நிறுத்தவில்லை. நிகழ்ச்சி நடக்கும்போதே காவலர்கள் சென்று பாதியில் இடையூறு செய்தது மிகத் தவறான நடவடிக்கையாகும். காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்சே தான் என்ற உண்மையை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்க வேண்டும்? சில காவல்துறையினர் சிந்தனையில் காவிச் சிந்தனை குடிகொண்டிருப்பது அனுமதிக்கக் கூடியது அல்ல.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இத்தகைய அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்படுவார்களா? என பல கேள்விகள் எழுகின்றன. காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோட்சேவின் வாரிசுகளுக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை தெளிவுபடத் தெரிவித்துள்ளார். இதனை சம்பந்தப்பட்ட கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 கோவை சம்பவம்

கோவை சம்பவம்

கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருமாவளவன்

திருமாவளவன்

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "அதிகாரிகள் நடந்துகொண்ட போக்கு கண்டனத்துக்குரியது. மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திருமாவளவன் அதில், கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்டனங்கள்

கண்டனங்கள்

கோவையில் நடந்த இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி வருகிறது.. காவல்துறையினரின் செயலுக்கு கம்யூனிஸ்டுகள், பெரியார் உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக மற்றும் கேரள ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இந்த 72 ஆண்டுகளாக காந்தியடிகளின் பாடல்கள் இசைக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறை அதற்கும் அனுமதி மறுத்துள்ள நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து வேதனை வெடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+