காலை 9 - 12 மணிக்குள்! திருச்சி, நெல்லை, கோவைக்கு.. அடுத்தடுத்து போன ஆச்சர்ய நியூஸ்! தமிழ்நாடா இது!
சென்னை: இன்று காலையில் இருந்து பிற்பகலுக்குள் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களுக்கு வியப்பளிக்கும் செய்தி சென்றுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இன்று மூன்று மிகப்பெரிய சம்பவங்கள் நடந்து உள்ளன.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடு என்றால் அது வெறும் சென்னை என்றுதான் இருந்தது. இதை பலரும் விமர்சனம் செய்தது உண்டு. ஆனால் இப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் பிரித்து விடப்படுகின்றன. உதாரணமாக விண்பாஸ்ட் தூத்துக்குடிக்கு சென்றது, காலனி தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை சென்றது, ஓசூருக்கு மின்னணு தொழிற்சாலைகள் சென்றது என்று முதலீடுகள் பரவலாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்தான் முதலீடுகள் ரீதியாக தமிழ்நாட்டிற்கு 4 முக்கியமான நலன் செய்திகள் வந்துள்ளன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
நெல்லைக்கு போன நல்ல செய்தி: Tata Power Renewable Energy Ltd (TPREL)ன் துணை நிறுவனமான TP Solar Ltd, இன்று நெல்லையில் தனது முதல் உற்பத்தியை தொடங்கியது. 2GW சோலார் செல் லைனின் வணிகரீதியான உற்பத்தி அதன் அதிநவீன உற்பத்தி ஆலையில் தொடங்கியுள்ளது.
4.3 ஜிகாவாட் மொத்த திறன் கொண்ட இந்த வசதி, இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை சூரிய மின்கல தொகுதி ஆகும். இந்தியாவில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.
இப்போது 2GW திறனில் இருக்கும் சூரிய மின்கல உற்பத்தியானது விரைவில் 4GW ஆக உயர்த்தப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோலார் உதிரிபாகங்கள் மூலம் இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 4-6 வாரங்களில் மீதமுள்ள 2GW திறன் உற்பத்தி செய்யப்படும். அடுத்த சில மாதங்களுக்குள் இங்கே மின்சார உற்பத்தி உச்ச உற்பத்தியை எட்டும் என்பதால் இந்தத் திட்டம் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சிக்கு போன நல்ல செய்தி: ஆப்பிள் சப்ளையர் ஜபில் திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.2,000 கோடி செலவில் நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜபில் துணைத் தலைவர் (செயல்பாடுகள்) மாட் குரோலி மற்றும் பிற நிர்வாகிகள் தலைமையிலான தமிழக பிரதிநிதிகள் குழு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் முக்கிய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் ஆகும். ஹெச்பி மற்றும் சிஸ்கோ போன்ற முக்கிய நிறுவனங்களின் உபகரணங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும். ஆப்பிள் போன் உற்பத்தியிலும், அதன் உபகரண உற்பத்தியிலும் முக்கிய பணிகளை செய்து வருகிறது.
கோவைக்கு குட் நியூஸ்: கோவையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பிரம்மாண்ட அறிவு மையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்க உள்ளன. இங்கே கட்டப்படும் நூலகம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே கோயம்புத்தூரில் தமிழ்நாடு டெக் சிட்டியை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 321 ஏக்கர் பரப்பளவில் PPP முறையில் TN டெக் சிட்டிக்கான விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஏலங்களை ELCOT வெளியிட்டுள்ளது.
சமீபத்தில்தான் புதிய திருப்பமாக பிரபல ஐடி நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. KGISL SEZ இல் ~300 பேருக்கு ஆரம்ப வேலை வாய்ப்புடன் புதிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கோவையில் ஐடி புரட்சி நடக்க தொடங்கி உள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கூட கோவையில் பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications