மாணவர்களின் உடல்நலம் எப்படி? ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில நேரங்களில் விளையாட்டு பாட வேலைகளில் மாணவர்கள் மயங்கி விழுந்து விடுகின்றனர். சில மாணவர்களுக்கு கண் பார்வை கோளாறு, காது கேளாமை பிரச்சினை ஏற்படுகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications