கல்லூரி மாணவிகள் DPயில் புகைப்படங்களை வைக்க வேண்டாம்.. மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி வேண்டுகோள்!
சென்னை: கல்லூரி மாணவிகள் DP-யில் தங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பில் மகளிர் சட்டங்கள், மகளிருக்கான உரிமைகள், மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், மகளிர் ஆணையத் தலைவி குமாரி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குமாரி, "மகளிர் ஆணையத் தலைவியாக என்னை முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பில் நியமித்த நாள் முதல் நிறைய விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய பிரச்சனை சைபர் கிரைம். குறிப்பாக, பெண்கள் சமூக வலைதளங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் கருணாநிதி இவர்களெல்லாம் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அவர்களெல்லாம் எங்களுக்காக போராடிய தலைவர்கள். பெண்களுக்கான சொத்து உரிமை எனப் பல சட்டங்களை கூறலாம். இதைப் பற்றியெல்லாம் கல்லூரி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சைபர் கிரைம் பிரச்சனை குறித்து பேசுகையில் சேலத்தில் நடந்த சைபர் கிரைம் ஒன்றை ஒரு பெண் பகிர்ந்துகொண்டார். அப்போது, சேலம் எஸ்.பி சிவக்குமார் பிரச்சனை குறித்து புகார் அளித்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தார்" என்றார்.
மேலும், "கல்லூரி மாணவிகள் DPயில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். அந்தப் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள்; டெக்னாலஜியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி ஆள வேண்டும் என்பது முக்கியம். அதை மாணவிகளுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறோம்." எனத் தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications