என்னை நாசம் செய்யறாங்க.. காப்பாத்துங்க.. அடைச்சி வச்சிருக்காங்க.. பேராசிரியை கதறல்.. பரபர வீடியோ
பாலியல் தொல்லை தருகிறார்கள் என்று பேராசிரியை புகார் சொல்லி உள்ளார்
Recommended Video
சென்னை: "என்னை நாசம் செய்யறாங்க.. ஒரு ரூமுக்குள்ள அடைச்சி வச்சிருக்காங்க.. சாப்பாடு, தண்ணி இல்லை.. என்னை காப்பாத்துங்க" என்று கல்லூரி பேராசிரியை வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை தந்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்க்கிறார் இந்த இளம் பெண். இவர் திடீரென ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது:
"இங்க நான் அசிஸ்டெண்ட் புரொபசராக வேலை பார்க்கிறேன். இங்க காலேஜ் குவார்ட்டஸில் ஒன்றரை வருஷமா தங்கி இருக்கேன். இங்க நிறைய பாலியல் தொல்லை நடக்குது.

சாப்பாடு
என்னை ஒரு ரூமுக்கு உள்ளே அடைச்சி வச்சி பாலியல் தொல்லை தந்துட்டு இருக்காங்க. பிரின்சிபால் வெங்கடகிருஷ்ணன், அட்மின் லட்சுமிகாந்தன், மேனேஜர் சசிக்குமார், பைனான்சியர் செந்தில்குமார், துப்புரவு பணியாளர் முனியம்மா இவங்க எல்லாருமே எனக்கு டார்ச்சர் தர்றாங்க..

மிரட்டல்
அது மட்டுமில்லை.. என்னை நாசம் செய்யும் இவங்களே வெளியில போய் என்னை பத்தி தப்பாவும் சொல்லிட்டு வர்றாங்க. என்னை மிரட்டறாங்க.. என் வாழ்க்கையே நாசமாக்கிடுவோம்னு சொல்றாங்க. 2 வாரமாக எனக்கு இந்த ரூமில் சாப்பாடு இல்லை.. தண்ணியும் தர்றது இல்லை.. உடல்ரீதியாக சோர்ந்து போய்ட்டேன். என்னை தற்கொலைக்கு தூண்டறாங்க... என்னை காப்பாத்துங்க.. எனக்கு உதவுங்க.. எனக்கு நீதி வேணும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

நடவடிக்கை
இதையடுத்து, இந்த வீடியோ பெரும் வைரலாகி சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த கல்லூரியின் டீன் குணசேகரன், இதுகுறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைத்திருப்பதாகவும், அந்த பெண் சொன்ன நபர் குற்றங்கள் செய்திருந்தால் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கு பதிவு
பின்னர், பேராசிரியை புகார் சொன்ன 5 பேர் மீது கொலைமுயற்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேராசிரியை கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் இந்த வீடியோ இன்னமும் வைரலாகி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications