தோழிகள் கண்முன்னே நடந்த சோகம்.. பப்பில் டான்ஸ்! துடிதுடித்து பலியான கல்லூரி மாணவர்.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர், நேற்று இரவு தன் தோழிகளுடன் பப்பில் நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 22 வயதே ஆன கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல் (வயது 22). இவர் சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு படிப்பதற்காக இந்த கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரியின் விடுதியில் தங்கி மாணவர் முமமது சுகைல் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தனது தோழிகள் சிலருடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் பப்பில் தனது தோழிகளுடன் நடமாடிக்கொண்டிருந்தார். நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென முகமது சுகைல் சுருண்டு கீழே விழுந்தார்.
முகமது சுகைல் மயக்கத்தில் கிழே விழுவதை பார்த்ததும் அவரது தோழிகள் பதறி போயினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கல்லூரி மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் முகமது சுகைல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர்.
கொல்கத்தாவை அடுத்து பெங்களூரில் கொடூரம்.. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் சென்ற இளம்பெண் பலாத்காரம்
தொடர்ந்து மாணவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பானது கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்றும் ஒரு நபருக்கு 1,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
எனினும் கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் உட்கொண்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், கல்லூரி மாணவர் முகமது சுகைல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 22 வயதே ஆன கல்லூரி மாணவர் பப்பில் உயிரிழந்தத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications