ஹாப்பி நியூ இயர்! வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. புத்தாண்டு தினத்தில் சிலிண்டர் விலை குறைந்திருப்பது வணிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரிப்பதால் உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து வந்தது. இப்படி இருக்கையில், புத்தாண்டு இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்திருக்கிறது. இதனால் வணிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

பெட்ரோல், டீசலை போல கேஸ் சிலிண்டர் விலையையும் மாற்றி அமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி விலை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. விலை ஏறும்போது அது சாமானிய மக்களின் வாழ்க்கையில்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு உணவு பொருட்களின் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருமுறை கேஸ் விலை உயர்ந்துவிட்டால் அதன் பிறகு உணவு விலையும் உயர தொடங்கிவிடுகிறது. மீண்டும் கேஸ் விலை குறைந்தாலும் உணவு விலை எளிதில் குறைவதில்லை.
மறுபுறம் அத்தியாவசிய செலவுகளை சாமானிய மக்கள் தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். மறுபுறம் விறகு அடுப்பு நோக்கி பெண்கள் நகர்கின்றனர். இது அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. இப்படியாக உருவாகும் உணவு பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே கடுமையாக பாதிக்கிறது.
இன்றைய நிலையில் வீட்டிற்கு பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்று ரூ.800-ரூ.1000 வரை விற்பனையாகிறது. வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1966க்கு விற்பனையாகிறது. இன்று ரூ.14.50 குறைந்திருப்பதால்தான் இந்த விலை. ஆனால் சொற்பமாக விலையை குறைப்பது சாமானிய மக்களு எந்த விதத்திலும் பயன் தராது என்று அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications