வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ30 குறைவு- சென்னையில் ரூ1930-க்கு விற்பனை!
சென்னை: வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ30 அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ1930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் நமது நாட்டில் வீட்டு பயன்பாடு, வணிகப் பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர்கள்- கேஸ் சிலிண்டர் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது.

கடந்த மாதம் நமது நாடு முழுவதும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ19 அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை உயரும் அச்சம் ஏற்பட்டது. மேலும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ,1,795, மும்பையில் ரூ.1749, சென்னையில் ரூ.1,960, கொல்கத்தாவில் ரூ.1,911 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ30 குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.
இதனைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ,1,765, மும்பையில் ரூ.1719, சென்னையில் ரூ.1,930 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications