"அவர்தான் நல்லகண்ணு!" அரசு தந்த ரூ.10 லட்சம்.. அப்படியே நிவாரண நிதிக்கு கொடுத்த தன்னலமற்ற தலைவர்
சென்னை: தமிழ்நாடு அரசியலில் முதுபெரும் அரசியல் தலைவரான இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணு இன்று நம்மை விட்டு மறைந்தார். இளம் வயது முதலே மக்களுக்காக உழைத்து வந்த நல்லகண்ணு ஒரு நாளும் பணத்தின் பின்னாலோ பதவியின் பின்னாலோ சென்றதே இல்லை. அவரது தன்னலமற்ற தன்மையை உணர்த்தும் சம்பவம் தான் 2022 சுதந்திர தின விழாவின்போது நடந்தது.
இந்திய கம்யூ. மூத்த தலைவரான நல்லகண்ணு இன்று தனது 101வது வயதில் காலமானார். கடந்த 1ம் தேதி அவருக்குத் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 25 நாட்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று கலாமானார். அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் கலாமானார்.

நல்லகண்ணு
இந்திய அரசியலில் நல்லகண்ணுவை போல ஒருவரை மீண்டும் காண்பது அரிது. அந்தளவுக்கு மக்களுக்காகவே தனது வாழ்க்கை முழுக்க உழைத்தவர் நல்லகண்ணு. அவரது தன்னலமற்ற தன்மையை உணர்த்தும் சம்பவம் தான் 2022 சுதந்திர தின விழாவின்போது நடந்தது.
அதாவது தமிழ்நாடு அரசு கடந்த 2021 முதல் தகைசால் தமிழர் என்ற விருதை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த இந்த "தகைசால் தமிழர்" விருதைத் தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி 2022ல் இந்த விருது நல்லகண்ணுவிற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ரூ.10 லட்சம்
அதன்படி நடந்த சுதந்திர தின விழாவில் நல்லகண்ணுவிற்கு "தகைசால் தமிழர்" விருதைத் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். இந்த விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 லட்ச ரூபாய் காசோலையையும் அவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இதை மேடையில் நல்லகண்ணுவுக்கு வழங்கினார். அதை வாங்கிய நல்லகண்ணு நொடியும் யோசிக்காமல் அந்தத் தொகையை அரசுக்கே திரும்ப அளித்தார்.
ஸ்டன் ஆன முதல்வர்
அரசு அவருக்கு வழங்கிய ரூ.10 லட்ச ரூபாயுடன் தனது சொந்த நிதி ரூ.5 ஆயிரம் சேர்த்து ரூ.10.05 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகக் கூறி முதல்வரிடம் அளித்தார். விழா மேடையிலேயே காசோலையை கையில் வாங்கிய மறுநொடியை அவர் இதைச் செய்தார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் முதல்வர் ஸ்டாலின் கூட நல்லகண்ணு காசோலையை திரும்ப நன்கொடையாக வழங்கியதை எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி அவரே ஆச்சரியப்பட்டார்.
அந்தளவுக்குத் தன்னலமற்ற தலைவராக நல்லகண்ணு திகழ்ந்தார். பணம், பொருள், பதவி மீது எப்போதும் ஆசைப்படாத ஒரு தலைவராகவே நல்லகண்ணு இருந்தார். முன்னதாக அவரது 80வது பிறந்தநாளின் போது கட்சி சார்பில் அவருக்காக ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்தார்கள். ஆனால், அந்தத் தொகையை அவர் மீண்டும் கட்சிக்கே வழங்கினார். அதேபோல அவரது பயணத்திற்கு வசதியாகக் கட்சி நிர்வாகிகள் அவருக்கு கார் வழங்க யோசித்த போதும் அதை மறுத்தவர்.
முதல்முறை இல்லை
இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் அம்பேத்கர் விருது தரப்பட்ட சமயத்திலும், அதில் பாதித் தொகையைக் கட்சிக்கும், மீதித் தொகையை விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் கொடுத்தவர் தான் நல்லகண்ணு. இப்படித் தனக்காக எதையும் வைத்துக் கொள்ளாமல் மக்கள் பணிக்காகவே அனைத்தையும் கொடுத்த அதிசயமான அரசியல்வாதி தான் நல்லகண்ணு! அவரது மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் இழப்பு இல்லை.. ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குமே இழப்பு என்பதைச் சந்தேகமே இல்லாமல் கூறலாம்!
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications