ஆர்.நல்லகண்ணுவுக்கு திடீர் உடல்நல குறைவு! சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர் நல்லகண்ணு உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர் நல்லகண்ணுக்கு கடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதுநகர் வழங்கினார்.

விருது தொகையோடு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்ட நிலையில் அதனுடன் ஐயாயிரம் ரூபாய் சேர்த்து தமிழக அரசிடமே வழங்கினார் நல்லகண்ணு.

நல்லகண்ணு

நல்லகண்ணு

அப்போது மட்டுமல்ல அதற்கு முன்னதாகவே பல நேரங்களில் பணத்தின் மீது சிறிதும் பற்றுக் கொள்ளாதவர் ஆன நல்லகண்ணு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரச்சனைக்காக தற்போது வரை போராடி வருபவர். சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் எதிராக பலமுறை சிறை சென்றவர்.

கொண்ட கொள்கையில் உறுதி

கொண்ட கொள்கையில் உறுதி

எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடாமல் களத்தில் இறங்கி போராடும் நல்ல கண்ணுக்கு அரசியல் கட்சிகளை தாண்டி பலரும் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். பலர் உதவி செய்ய முன்வந்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தற்போது வரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் நல்லகண்ணு அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார்.

 உடல்நல குறைவு

உடல்நல குறைவு

இந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இதை அடுத்து அங்கேயே அனுமதிக்கப்பட்ட நல்ல கண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை?

நல்லகண்ணு உடல்நிலை சீராக உள்ளது எனவும் பொது மருத்துவர்கள் மற்றும் சிறுநீரகத்துறை மருத்துவர்கள் குழு நல்ல கண்ணுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனைகள் நடப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+