Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு பெரிய சிக்கல்? பொய்யான தகவல் வெளியிட்டதாக போலீசுக்கு போன புகார்.. பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகை தரப்பு புகாரில் தெரிவிக்கப்பட்டவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என தமிழக காவல்துறை தெரிவித்த நிலையில், பொய்யான தகவல் வெளியிட்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

complaint against raj bhavan officials who leaked untrue information on petrol bomb attack

காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஓடவிட்டு விளக்கம்: அப்போது, ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வந்தது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளில் கருக்கா வினோத் மஞ்சள் சட்டை அணிந்தபடி, கையில் பையுடன் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை வெளியிட்டுப் பேசிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், "கருக்கா வினோத் தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தன்னந்தனியாக பாதசாரி போல நடந்து வந்தது சிசிடிவி மூலமாக தெரிகிறது.

ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய கருக்கா வினோத் முயற்சிக்கவில்லை.
தான் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட 4 பாட்டில்களில் இரண்டு பாட்டில்களை சர்தார் படேல் சாலையில் எதிர்புறத்தில் இருந்து எரிய முற்பட்டபோது அவை ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள பேரிகேட் அருகே விழுந்தன. மாறாக, ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை. மேலும், குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, ஆளுநர் மாளிகை ஊழியர்களால் அவர் பிடிக்கப்படவும் இல்லை. வினோத் தனியாகதான் வந்துள்ளார். அவருடன் யாரும் வரவில்லை" எனத் தெரிவித்தார்.

complaint against raj bhavan officials who leaked untrue information on petrol bomb attack

ஆளுநர் மாளிகை கூறியவாறு எதுவும் நடக்கவில்லை: சென்னை பெருநகர காவல்துறை காவலர்கள் 5 பேரால் உடனடியாக பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுதான் நடந்த சம்பவம். ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் 'பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசியதாகவும், வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாகவும் சொல்லப்பட்டுள்ளது'. அப்படி எதுவும் நடக்கவில்லை.

போலீசார் தரப்பில்தான் முதலில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணையில்தான் குற்றவாளியுடன் வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா, அரசியல் தொடர்புள்ளதா என்பதை கூற முடியும். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளுநர் நேரம் கொடுக்கும் பட்சத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை தவறான தகவல்: மேலும், தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், "ஆளுநர் தரப்பில் சில புகார் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் முரண்பாடு உள்ளது. ஆளுநர் மாளிகை குறித்து நாங்கள் குற்றம் சுமத்த முடியாது. அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. புகாரில் உள்ள முரண்பாடுகள் குறித்தே நாங்கள் விளக்கமளிக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். அதில், ஆளுநர் மாளிகை முன்பாக நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் அலுவலகம் சார்பாக பொய்யான தகவல் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் பவன் அதிகாரிகள் மீது புகார்: ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாகப் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளதாகவும், பொய்யான தகவல் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை சார்பாக செய்தி வெளியிட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

எனவே பொய்யான செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கோவை கு. ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டும் வகையில் தகவல் வெளியிட்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+