வீட்டு வாடகை ரூ.20 லட்சம் தராமல் எஸ்கேப்.. யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் பரபரப்பான புகார்
சென்னை: பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தான் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை பணம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாக சென்னை போலீசில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி பாடல்களும் பாடி வருகிறார்.
இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அமைந்துள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் தான் சென்னை காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது யுவன் சங்கர் ராஜா வசித்து வந்த வாடகை வீடு என்பது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது. இந்நிலையில் தான் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், ‛‛கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா மறுத்து பேசி வந்துள்ளார்.
நான் வாடகை பணம் கேட்க போன் செய்தேபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வெளியே எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதனால் புகார் தொடர்பாக விசாரித்து யுவன் சங்கராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணைை தொடங்கி உள்ளனர். தற்போது வரை யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. இதற்கிடையே தான் இந்த புகார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications