"தூக்கிவிடுவேன்" ரயில்வே பயணிக்கு மிரட்டல்.. நாராயணன் திருப்பதி மீது புகார்..நடவடிக்கை கோரிய சிபிஎம்
நாராயணன் திருப்பதி குறித்து தென்னக ரயில்வேயிடம் சிபிஎம் புகாரளித்துள்ளது.
சென்னை: பிரதமர் மோடி குறித்து பேசிய பயணியிடம் மோதலில் ஈடுபட்ட பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்னக ரயில்வேயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, நேற்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது அதே ரயிலில், சென்னை ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார்.

மிரட்டிய நாராயணன் திருப்பதி
இந்தநிலையில் ரயிலில் பயணம் செய்தபோது பிரதமர் மோடி குறித்து பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி பெருமையாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் பிரதமர் நாட்டை விற்றுவிட்டார் என எதிர் கருத்து வைத்துள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாத நாராயணன் திருப்பதி, பொது இடத்தில் பிரதமரை இழிவுபடுத்தி விட்டார் எனவும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் தூக்கிவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

சிபிஎம் புகார்
இதை கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல்ராஜ், பயணிக்கு ஆதரவாக பேசவே மோதல் முற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் பிரச்சனையை தீர்த்து வைத்தனர். இந்தநிலையில் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில்வே காவல்துறையிடம் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளது.

பாலகிருஷ்ணன் பதிவு
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி "தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்" என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார்.

ரயில்வே போலீஸ்
இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே. சாமுவேல்ராஜை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.

கருத்து சுதந்திரம்
பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலீஸ் நடந்து கொண்ட விதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். பொதுவாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும். சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது.

நடவடிக்கை எடுத்திடுக
இந்நிலையில் பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையுமே காட்டுகிறது. இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்து விட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சிபிஎம் வன்மையாக கண்டிக்கிறது. தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications