கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதிய ஏடிஎம்கள் இல்லை என சர்ச்சை? சிஎம்டிஏ விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள் இருப்பதாகவும், இதனால் பயணிகள் அவதி அடைந்ததாகவும் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடுத்த 20 வருடங்களுக்கு நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் குறித்துதிறந்து முதலே பல்வே குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் முன் வைத்து வருகின்றன.

அப்படி தான் ஊடகம் ஒன்றில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கூடுதல் ஏடிஎம் மையங்கள் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தாக செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், உண்மை நிலை என்னவென்று விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இரண்டு இடங்களில் மொத்தம் 10 ATM மையங்கள் அமைக்க ஏற்கனவே சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அனுமதி வழங்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிட்டாச்சி ஆகியவை மூலம் ATM மையங்கள் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றுள் தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளின் ATM மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, நடமாடும் ATM வாகன இயந்திரம் ஒன்று பேருந்து வளாகத்தில் பயணிகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், கனரா வங்கி ATM மையம் வரும் 24.05.2024. க்குள்ளும், ஹிட்டாச்சி நிறுவன ATM 25.05.2024-க்குள்ளும், ஐசிஐசிஐ வங்கி ATM 29.05.2024-க்குள்ளும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அவ்வங்கிகள் உறுதி அளித்துள்ளனர்.

எனவே இம்மாத இறுதிக்குள் ஐந்து ATM மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications