முகம் அப்படியே சுருங்க.. கண்களில் தெரிந்த கோபம்.. தோனி ஏன் இப்படி மாறினாரு.. இதுதான் காரணமா?
சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த சில போட்டிகளாக களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கோபத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2023 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். கேப்டன் கூலாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த சில போட்டிகளாக களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில போட்டிகளுக்கு முன் மொயின் அலி பீல்டிங் செய்யும் போது அவர் மீது கோபம் அடைந்தார். அலி என்று மைதானத்திலேயே அவர் மீது கோபமாக கத்தினார். அதன்பின் கடந்த போட்டியில் மதீஷ் பத்திரனா மீது கோபம் அடைந்தார்.
கண்கள் முழுக்க கோபத்தோடு நெற்றி சுருங்க பத்திரனா மிக கோபமாக காணப்பட்டார். இந்த கோபத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் 1
இது தொடர்பாக சிஎஸ்கேவில் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளிடம் விசாரித்ததில், தோனி பொதுவாக களத்தில் கோபம் அடைவார். ஆனால் என்ன அதை வெளியே காட்டமாட்டார். இக்கட்டான நேரத்தில் அவர் கூலாகவே இருப்பார்.
ஆனால் பீல்டர்கள், பவுலர்கள் தவறு செய்தால் அவர் கண்டிப்பாக கோபம் அடைவார். அப்படி அவர் அடைந்த கோபம்தான் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே பீல்டிங் சரியில்லை. சிஎஸ்கே பீல்டர்கள் சிலர் மோசமாக சொதப்புகிறார்கள். ருத்துராஜ் கூட கேட்ச் விடுகிறார். கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே அதிக கேட்சுகளை விட்டுள்ளது. எப்போதும் கோபம் அடையாத தோனியே நேற்று மைதானத்தில் மொயின் அலியை பார்த்து கோபம் அடையும் அளவிற்கு நிலைமை மோசமானது.
அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி மைதானத்திற்கு வரும் முன் முறையாக கேட்ச் பயிற்சி செய்துவிட்டு வர வேண்டும் என்று இப்போதே ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக மகேஷ் தீக்சனா முறையாக பயிற்சி எடுத்துவிட்டு பீல்டிங் செய்ய வேண்டும். கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே பீல்டிங் சொதப்பலாக இருந்தது என்று நெட்டிசன்கள் சிஎஸ்கே அணிக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதை களத்திலும் உணர்ந்து இருக்கும் தோனி வீரர்கள் மீது கோபம் அடைகிறார்.
காரணம் 2
பொதுவாக தோனி பவுலர்களுக்கு சொல்லும் அறிவுரைகளை அப்படியே கேட்க வேண்டும். இல்லையென்றால் தோனிக்கு பிடிக்காது. சுயமாக மாற்றி போட்டால் தோனி கோபம் அடைவார். மதீஷ் பத்திரனா அப்படி சரியான முறையில் பவுலிங் போடாத காரணத்தால்தான் தோனி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சீசனை வெற்றிபெற வேண்டும் என்பதில் தோனி தீர்க்கமாக இருக்கிறார். அதனால் அவர் கண்டிப்பாக சில கசப்பான, கண்டிப்பான முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications