Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாவே மாறுதே.. ஒரு தெருவுக்கு ஒரே கூட்டு மதிப்பு நிர்ணயம்.. பத்திரப்பதிவு அதிரடி.. பறந்த ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் கூட்டு மதிப்பு என்பது பொதுமக்களிடம் களஆய்வு விசாரணை, கட்டுமான நிறுவனங்களின் விளம்பரம் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் கூட்டு மதிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தெருவுக்கு ஒரே கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படும் என்றும், கூட்டுமதிப்பு அதிகமாக இருந்தால் 10 சதவீதம் வரை குறைக்கலாம் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

composite valuation of flats based on field survey advertisement by construction companies, TN Registration Dept

"அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள், ஆலோசனைகள் பெற்ற நிலையில், இதுகுறித்து கடந்த 13ம் தேதி மைய வழிகாட்டு குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கூட்டு மதிப்பு நிர்ணய நடைமுறைகளில் சில திருத்திய, கூடுதல் நெறிமுறைகளை நிர்ணயிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முழுவதுமாக திரும்பப் பெறப்படுகிறது.அதற்குப் பதிலாக, தற்போது பின்வரும் புதிய நெறிமுறைகள் வகுத்தளிக்கப்படுகின்றன. அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் என்பது கட்டிட மதிப்பு மற்றும் மனை மதிப்பு ஆகியவை சேர்ந்த மதிப்பாகும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு அந்தந்த மண்டலத்தின் துணை பதிவுத்துறை தலைவரால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும்.

- கூட்டு மதிப்பு என்பது பொதுமக்களிடம் மேற்கொள்ளப்படும் கள ஆய்வு விசாரணையின் மூலமாகவும், கட்டுமான நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் மூலமாகவும் கண்டறியப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்தை பொருத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு அக்கிராமத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு தெரு, சர்வே எண்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

- அவ்வாறு நிர்ணயம் செய்யும்போது புல எண், தெருக்களுக்கு அவற்றின் சாதக/ பாதக அம்சங்கள், வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் புல எண், தெரு வாரியாக கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

மேலும் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் அனைத்து விற்பனைக்குரிய பகுதியை கருத்தில் கொண்டு கட்டிட பரப்பின் மொத்த விஸ்தீரணத்துக்கு கூட்டு மதிப்பு கணக்கிடப்பட வேண்டும். கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட பின் அதனை கட்டிட பரப்பின் மொத்த விஸ்தீரணத்துடன் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கி வரும் தொகை அல்லது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள பிளாட்டின் மதிப்பு இவற்றில் எது அதிகமோ அதற்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.

- ஒரு தெருவிற்கு ஒரே ஒரு கூட்டு மதிப்பே நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு தெரு, புல எண்ணில் வரும் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த மதிப்பு கடைபிடிக்கப்பட வேண்டும். தெரு ஏற்படாமல், சர்வே எண் மதிப்புள்ள பகுதிகளில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படுமெனில், துணை பதிவுத்துறை தலைவரால் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கென தனியே சரியான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

- இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கூட்டு மதிப்பு ஓர் அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்து அதிகமாக உள்ளது என கோரிக்கை பெறப்பட்டாலோ அல்லது குறைவாக இருப்பதாக அறிய வந்தாலோ அதை பரிசீலித்து 10 சதவீதம் வரை கூட்டு மதிப்பை குறைத்து அல்லது அதிகரித்து சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள் நிர்ணயம் செய்யலாம். 10 சதவீதத்துக்கு மேல் குறைக்க வேண்டிய நிலை இருப்பின் உரிய பரிந்துரையுடன் துணை பதிவுத்துறை தலைவர்கள் மைய வழிகாட்டி குழுவிற்கு அனுப்ப வேண்டும்.

- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எழுதி கொடுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்தமட்டில் தற்போது அந்தந்த வாரியங்களால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

- முதல் விற்பனை தொடர்பாக அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களுக்கும் கூட்டு மதிப்பு மட்டுமே கணக்கில் கொண்டு கடந்த டிச.1ம் தேதி தெரிவிக்கப்பட்டபடி முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

- மென்பொருளில் கூட்டு மதிப்பு கணக்கிடும் வசதி ஏற்படுத்தப்படும் வரை கைமுறையாக கணக்கிட்டு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் அனைத்தும் வழுவாது பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. துணை பதிவுத்துறை தலைவர்கள் இந்த சுற்றறிக்கையை பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்குமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களிடம் ஒப்புதல் பெற்று கோர்வை செய்யுமாறும் மாவட்ட பதிவாளர்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று கோர்வை செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+