அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்! கணினி ஆசிரியர் சங்கம் கண்ணீர் கோரிக்கை! விஜய் கேட்பாரா?
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் என்ற பாடப்பிரிவை ஏற்படுத்தி பிஎட் படித்த கணினி அறிவியல் படித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு அச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமரேசன் கூறியிருப்பதாவது: புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும்.

இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான் இதனை மாற்றிட புதிய அரசு வந்ததும் கணினி அறிவியல் பாடத்திற்கு என்று முக்கியத்துவம் தந்து கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும்.
கணினி அறிவியல் பாடத்திற்கென பி எட் பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும். வருகின்ற புதிய அரசு மாணவர்களின் எதிர்கால கல்விக்கு முதல் கையெழுத்திட வேண்டும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் என்பது அரசு பள்ளியில் இல்லை. அதற்கான பாட புத்தகங்களும் பாட வேலைகளும் இல்லை.
இந்நிலையில் மத்திய அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு என்று ஆய்வகங்கள் அமைத்தும்
அதற்கான ஆசிரியர்கள் நியமிக்க நிதி தந்தும் தற்போது வரை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் என்பது மூன்று பக்கங்கள் மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் உள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்பே கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் நிச்சயம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications