அரசு விரைவு பேருந்து பயணிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு.. 150 ரூபாய் வரை உயரும் கட்டணம்.. எப்படி?
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை நீக்கப்பட்டதால் பேருந்து கட்டணம் ரூ 50 முதல் 150 ரூபாய் வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொலைதூரங்களுக்கு செல்ல மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் நாடுகிறார்கள். அதில் இருக்கும் வசதிகளை போலவே ஏசி வசதி உள்ளிட்டவைகளை கொண்ட விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பேருந்துகளில் வார நாட்களில் பயணம் செய்யும் போது 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அதே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பயணம் செய்யும் போது அந்த கட்டண சலுகையும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் தமிழக போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கப்படுகிறது.

இதற்கான உத்தரவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக வெளியான நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு கட்டண சலுகையும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் சற்று அதிருப்தியில் உள்ளனர். கோடை விடுமுறை முடிந்தவுடனாவது இந்த கட்டண சலுகை கிடைக்குமா இல்லை அப்படியே ரத்து செய்துவிடுவார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications