அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு.. ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு ஜாமீன்.. நிபந்தனை என்ன?
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ் மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார். இந்த புகாரையடுத்து மணியன் மீது, பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ள மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு இருமுறை நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மணியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.வி.எஸ் மணியன் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications