ஓபிசி இட ஒதுக்கீடு.. இதைப் பற்றியெல்லாம் கருத்தே இல்லையா.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர் கேள்வி!
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தபட்டோரின் இடஒதுக்கீடு உரிமை பறிப்பு விவகாரத்தில் கருத்து எதுவுமே இல்லையா? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியனும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை முன்வைத்து ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 70%, இந்திய அளவில் 52%. அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு. அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என பதிவிட்டுள்ளார்.
ஜோதிமணியின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications