சுதந்திர தின விழா பாதயாத்திரை! கைகளில் கொடியுடன் உற்சாகமாக வலம் வரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!
சென்னை: சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பிரமுகர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த நடைபயணம் நிகழ்ச்சியால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.
சுதந்திர தின விழாவை ஒரு பக்கம் பாஜகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வரும் வேளையில் காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்கு கடும் டஃப் கொடுத்து வருகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை ஒட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபபயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊர் ஊராக பயணித்து கே.எஸ்.அழகிரி இதில் பங்கேற்று வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட தனது சொந்த ஊரான சிவகங்கையில் கடந்த 2 நாட்களாக கையில் கொடியை ஏந்தி பாதயாத்திரை சென்றார்.
கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள் எல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் கதர்ச்சட்டை தொண்டர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது.

சென்னை மதுரவாயலில் காங்கிரஸ் மகளிரணி தேசியச் செயலாளர் ஹசீனா சையத் நடத்திய சுதந்திர தின பவளவிழாவில் மகாத்மா காந்தி வேடமணிந்தவாறு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கலந்துகொண்டார்.
தேசப்பற்றுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என ஏற்கனவே ராகுல் விமர்சித்து வரும் நிலையில், மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் வேடமணிந்த நபர்களை தன்னுடன் பாத யாத்திரையில் பங்கேற்க வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஹசீனா சையத்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications