காங். மூத்த தலைவர்.. முன்னாள் எம்.பி. அன்பரசு காலமானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. இரா. அன்பரசு உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார்.

கடந்த 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இருமுறை மத்திய சென்னை லோக்சபா தொகுதியிலிருந்து, காங்கிரஸ் கட்சியி சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் அன்பரசு.

Congress former MP Anbarasu no more

முன்னதாக 1980ஆம் ஆண்டு செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டவர். மூத்த நாடாளுமன்றவாதியான அன்பரசு, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று இரவு அன்பரசுவின் உயிர் பிரிந்தது என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள ட்வீட்டில், முன்னாள் எம்.பி.தலைவர் இரா.அன்பரசு இதுபோன்ற ஒரு நேரத்தில் மறைந்துள்ளார். அதற்கு ஆழ்ந்த வருத்தம். அவர் ஒரு பிரபலமான தலைவராக இருந்தார், அவர் தனது கடைசி மூச்சு வரை தமிழ்நாடு மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்தார். காங்கிரஸுடனான அவரது விசுவாசமும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நினைவுகூரத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+