ஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டி- வீடியோ

    டெல்லி : சிவகங்கை லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதுவையுடன் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதில் புதுவை எம்பி வேட்பாளராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டு வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இதன் பிறகு இவர்தான் வேட்பாளர் என தலைமை அறிவித்துள்ளது.

    வேட்பாளர் இல்லை

    வேட்பாளர் இல்லை

    மேலும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துவிட்டது. இதில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இதனால் அந்த தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    கட்சி தலைமை

    கட்சி தலைமை

    இந்த தொகுதியில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரை ஏற்க கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பெரும் தலைகள் களமிறங்கும் கரூர் தொகுதி.. அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா?

    காங்கிரஸ் அறிவிப்பு

    காங்கிரஸ் அறிவிப்பு

    சிவகங்கைக்கு வேட்பாளராக கார்த்தி சிதம்பரமோ இல்லை சுதர்சன நாச்சியப்பனோ போட்டியிடலாம் என கூறப்பட்டிருந்த நிலையில் எச் ராஜாவை எதிர்க்க கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    4-ஆவது இடம்

    4-ஆவது இடம்

    2014-ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் எச் ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது அவரே காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+