இறங்கி வந்த மம்தா பானர்ஜி.. காங்கிரசுடன் டீலிங் ஓவர்? இறுதியாகுது கூட்டணி? அடித்து ஆடும் இந்தியா
சென்னை: ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் உடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தையை முடிக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் காங்கிரஸ் பல மாநில கட்சிகளுடன் இணைந்து இந்திய கூட்டணியை உருவாக்கி உள்ளது. 22 கட்சிகள் தற்போது இந்திய கூட்டணியில் உள்ளன. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது .

பின்னடைவு: இது போக திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி இந்திய கூட்டணியில் லோக்சபா தேர்தலை மேற்கு வங்கத்தில் சந்திக்க மாட்டேன் என்று அறிவித்து இருந்தார். நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் இந்தியா கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டது. இதனால் எங்கே இந்தியா கூட்டணி உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.
காங்கிரஸ் சுவராசியம்: இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 2 பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு உறுதியாகி உள்ளது.
டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா 2024 தேர்தலில் 05 மாநிலங்களில் INC & AAP கூட்டணியை இறுதி செய்துள்ளன
டெல்லி: காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகிறது
ஹரியானா: ஆம் ஆத்மி 1 தொகுதியில் போட்டியிடுகிறது
குஜராத்: ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டியிடுகிறது
அசாம்: ஆம் ஆத்மி 0 தொகுதியில் போட்டியிடுகிறது
சண்டிகர்: காங்கிரஸ் மொத்தமாக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது போக உத்தரபிரதேசத்தில் 17 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும், மீதமுள்ள 63 இடங்கள் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) மற்றும் இந்திய கூட்டணியின் மற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து 2 மாநிலங்களில் காங்கிரஸ் அதிரடியாக கூட்டணியை இறுதி செய்துள்ளது., ஏற்கனவே தமிழ்நாட்டில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில், இன்னும் 2 பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் அடித்து ஆடி உள்ளது. வரும் நாட்களில் மேலும் சில மாநிலங்களில் காங்கிரஸ் இதேபோல் கூட்டணியை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மம்தாவும் இறங்கி வருகிறார்: ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் உடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தையை முடிக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அங்கே உள்ள 42 லோக்சபா இடங்களில் 5-7 இடங்களை பெற்றுக்கொள்ள காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளதாம். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கூறிய நிலையில் தற்போது மம்தா பானர்ஜி இறங்கி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியும் மிக குறைவான இடங்களை பெற்றுக்கொண்டு, கூட்டணியை இறுதி செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications