மோடி படத்தை ஒட்டினவங்களை ஏன் கைது செய்யல..? “பாஜக மனசை குளிர வைக்கவா?” - காங்கிரஸ் சரமாரி அட்டாக்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் விளம்பர போஸ்டரில் மோடி படத்தை ஒட்டிய விவகாரத்தில் பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னையில் பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில், பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை.
இந்நிலையில், அந்த விளம்பரத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு சில அமைப்பினர் கருப்பு மை பூசி மோடி படத்தை அழித்தனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினின் தீவிர முயற்சியால்
இந்த சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகமே பெருமைப்படத்தக்க வகையில் 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சியால் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை.

மோடிக்கு அழைப்பு
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இப்போட்டிகள் தற்போது, சென்னைக்கு அருகில் நடைபெறுவது மிகுந்த வரவேற்புக்குரியது. மிகுந்த பொருளாதார இடர்ப்பாடுகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கி, அசுர வேகத்தில் ஏற்பாடுகள் நடைபெறுவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். இந்த சிறப்புமிகு ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டிருக்கிறார்.

மோடி படம்
அதற்கான விளம்பரப் பலகைகள் பரவலாக வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது. பாஜகவினர் சிலர் இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஒட்டியிருக்கின்றனர். அந்த வீடியோ பரவியது பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கறுப்பு மை பூசி அழிப்பு
இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது.

ஏன் கைது செய்யவில்லை?
அந்த விளம்பரத்தில் தான் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

வெறுப்பை மறைக்க முடியாது
பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாகவே ஆத்திரம் கொண்ட தமிழர்கள் சிலர் பிரதமர் மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார் கே.எஸ்.அழகிரி.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications