கொல்லைப்புற வழியில் பதவி அனுபவிக்கும் திருச்சி சிவா! காமராஜரை பேசுவதா? காங்.எம்எல்ஏ தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா உடனடியாக நிபந்தனையின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

trichy siva kamarajar congress

யாகாவராயினும் நாகாக்க எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன்பு தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மைக் கிடைத்தால் பேசுவதா

மேடை கிடைத்துவிட்டது, மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசியிருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல். காமராஜர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார், அவர் இறக்கும் போது அவர் பாக்கெட்டில் என்ன இருந்தது.

சொந்த வீடு இல்லை

அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து 4, 5 வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர் காமராஜர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், எதை பேசுகிறோம் என்ன பேசுகிறோம்? சுய நினைவில்தான் பேசுகிறோமா என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் திருச்சி சிவா.

திருச்சி சிவா

ஏசி இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என சொல்லியிருக்கிறார் திருச்சி சிவா. யார் இல்லாமல் யார் தூங்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஒரு முதல்வராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையானவர்.

கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு நாகரீகமாக நான் என்னுடைய கண்டனத்தை பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது. திமுகவினுடைய தலைமை திருச்சி சிவா மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

trichy siva kamarajar congress

பெரியார்

தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட காமராஜரை தமிழக மக்களை காக்க வந்த ரட்சகர் என பேசியது குடியரசு பத்திரிகையில் எழுதியது அனைவரும் அறிந்த ஒன்று. நாளும் மக்களுக்காக சிந்தித்து நாட்டு மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

9 ஆண்டு காலம்

9ஆண்டு காலம் நாட்டின் விடுதலைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதை நாடறியும் நல்லவர்கள் அறிவார்கள். நாட்டு மக்கள் அறிவார்கள். இயக்கம் பெரிதா பதவி பெரிதா என்ற நிலை வந்த போது 9ஆண்டு காலம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த காமராஜர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற சென்றவர். பல பிரதமர்களை தலைவர்களை உருவாக்கியதால் கிங்மேக்கர் என அழைக்கப்பட்டவர்.

ரஷ்யாவில் வேஷ்டி சட்டை

தமிழகத்தை தாண்டினாலே கோட்டும் சூட்டும் போட்டு அலையும் அரசியல் அலப்பறைகள் மத்தியில் ரஷ்யா நாட்டுக்குச் சென்ற போது கூட வேஷ்டி சட்டையில் சென்ற எளிமைக்கு சொந்தக்காரர் காமராஜர். மக்களை சந்திக்காமல் இளைஞர்களுக்கு வழிவிடாமல் கொல்லைப்புற வழியில் பதவி சுகத்தை அனுபவித்து வரும் திருச்சி சிவா போன்ற தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் காமராஜரை பற்றி தொடர்ந்து பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிதக்கையில் ராஜேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+