தலையில் டை! மிடுக்கான உடை நடை! பழைய இளங்கோவனாக சட்டசபைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்முறையாக இன்று சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
தலையில் கரு கருவென டை அடித்து, மிடுக்கான உடை நடையோடு பழைய இளங்கோவனாக கம்பீரமாக சட்டசபைக்குள் நுழைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

நெஞ்சுவலி, கொரோனா தொற்று, மூச்சுத்திணறல், சளி, என பல உடல் உபாதைகளால் அவதிப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஐசியூவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்மிட் செய்யப்பட்டிருந்ததால் அவர் உடல் நலம் குறித்து பரபரப்பு தொடர்ந்து இருந்து வந்தது. இளங்கோவனின் உடல்நிலையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தினமும் அரசு உன்னிப்பாக கவனித்து வந்தது.
இளங்கோவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடர்ந்து கேட்டறிந்து வந்தார்.
ஒரு வழியாக அனைத்து நோய்களில் இருந்தும் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பிய இளங்கோவன், சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பழைய உற்சாகத்துடன் இன்று பேரவைக்கு வந்தார்.

அவரை வரவேற்ற சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது அறைக்கு அழைத்துச் சென்று பொன்னாடை அணிவித்து பூக்கூடை வழங்கினார்.
மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை சென்றதால் அங்கு செய்யப்பட்டிருந்த பல்வேறு மாற்றங்களை கவனித்தப்படி நடந்தார்.
அவைக்கு செல்வதற்கான வழியில் இளங்கோவனை அழைத்துச் சென்ற செல்வப்பெருந்தகை மெயின் கதவு வழியாக உள்ளே சென்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications