சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.. காரை லாக் செய்ததால் பரபரப்பு!
சென்னை: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலரை, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு சொன்னதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்.எல்.ஏ, டிராபிக் போலீசை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமாரின் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்கும்படி, போக்குவரத்து காவலர் பிரபாகரன் கூறியுள்ளார்.

போக்குவரத்து காவலர் பிரபாகரனுடன் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போக்குவரத்து காவலர் பிரபாகரனை எம்எல்ஏ ராஜ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. என் காரை எடுக்க முடியாது, இங்கு தான் நிற்கும் என எம்.எல்.ஏ ராஜ்குமார் கோபமாக விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து, காரின் சக்கரங்களை பூட்டி ரசீது போட்டுள்ளார் போக்குவரத்து காவலர் பிரபாகரன். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அண்ணா சாலை போலீசார் காவல் உயரதிகாாிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், தற்போது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications