நீங்கள் எல்லாம் உயிருடன் இருக்கவேண்டும், பெண்ணுரிமை கேட்கும் நான் சாகணுமா?-சீமானுக்கு ஜோதிமணி கேள்வி
சென்னை: பாலியல் சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் கே.டி.ராகவன் விவகாரத்தில் "தம்மை விஷம் குடிச்சு செத்துப் போ" என ஒருமையில் விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ அண்மையில் வெளியானது. இதனையடுத்து பாஜக பொதுச்செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்.. அவரை வீடியோ எடுத்ததுதான் குற்றம்.. அந்த நபரைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்றார்.

ஜோதிமணி கண்டனம்
சீமானின் இந்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜோதிமணி தமது அறிக்கையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

பாலியல் குற்றங்களை ஆதரிப்பதா?
பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க,ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு.சீமான் போன்றவர்களிடமும் பெண்களும்,தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு,மரியாதை,கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள்,பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள். காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள்,ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா? எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை சீமான் நினைவில் கொள்ளவேண்டும்.

பாஜகவின் பி டீம்
சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் சீமான் பாஜகவின் B Team என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என சாடியிருந்தார்.
விஷம் குடிச்சு செத்து போ
ஜோதிமணியின் இந்த கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், ஜோதிமணி இவ்வளவு பேச வேண்டியது இல்லை.. ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ என ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் கே.டி.ராகவனின் பாலியல் சுரண்டலை நாங்கள் தட்டிக் கேட்டோம். பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை எதிர்த்தும் நாங்கள் போராடினோம். ஆனால் பாஜகவிடம் இருந்தோ ராகவனிடம் இருந்தோ எந்த எதிர்வினையும் வரவில்லை. சீமானிடம் இருந்து மட்டும்தான் எதிர்வினை வருகிறது.

ஜோதிமணி மீண்டும் கண்டனம்
யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என எந்தவித கூச்சமும் வெட்கமும் இல்லாமல் ராகவனின் பாலியல் குற்றத்தை சீமான் ஆதரிக்கிறார். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்துல எதுக்கு நெறி கட்டுது? உங்கமேல பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் பயந்துகிட்டு ஆதரிக்கிறீர்களா?என நான் சீமானை பார்த்து கேள்வி எழுப்பினேன். இதில் என்ன தப்பு இருக்கு? இதுக்கு நேர்மையாக பதில் சொல்ல முடியாமல் விஷம் குடிச்சு செத்து போ என சொல்வதுதான் கண்ணியமான அரசியலா? நான் எதுக்கு விஷம் குடிச்சு சாகனும்? பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்பட்டமாக கேடி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது,பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிச்சு சாக வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications